Tamil Nadu Latest News: பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும், பாஜகவின் நட்சத்திர பிரமுகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
Tamil Nadu Latest News: குற்றம் சொல்லி அரசியல் செய்கிறார்கள்
அப்போது பேசிய அவர்,"மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பொதுமக்களிடம் பரப்பி அவர்களை திசை திருப்புவது திமுகவின் வேலையாக உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளை திரித்து மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதையாவது குற்றம் சொல்லி அரசியல் செய்ய வேண்டும். இதே நிலைப்பாட்டை தொடர்கதையாக செயல்படுத்தி வருகின்றனர்" என்றார்.
Tamil Nadu Latest News: விஜய்க்கு பாடம் நடத்திய சரத்குமார்
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேசிய சரத்குமார்,"உண்மையைப் பேச தெரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் பேசுவது போல அரசியலில் பேசக்கூடாது. கருத்தோடு தெளிவாகவும் புள்ளி விவரங்களோடு உண்மையை மட்டுமே பேச வேண்டும்.
சொந்த மாநிலத்தில் கூட வெற்றி பெற முடியாத பிரசாந்த் கிஷோர் தற்போது விஜய்க்கு ஆலோசகராக உள்ளார் என்றால் விஜய்யின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்" என்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சமத்துவ விருந்து பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து சரத்குமார் உணவருந்தினார்.
Tamil Nadu Latest News: 'மத்திய அரசு அறிவிக்கவே இல்லை'
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், "தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் சொல்வதற்கோ பேசுவதற்கோ இந்த அரசுக்கு எதுவும் இல்லை. எதையாவது ஒன்றை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.
தொகுதி மறு சீரமைப்பு என்று மத்திய அரசு அறிவிக்கவே இல்லை. அவர்கள் மத்திய அரசு அறிவித்த பிறகு அறிவித்திருந்தால் எல்லோரும் சேர்ந்து கூட இதற்காக நாம் போராடி இருக்கலாம். தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் குறையும் என்கின்ற நிலையில் கண்டிப்பாக எல்லாரும் போராடி இருக்கலாம்.
Tamil Nadu Latest News: எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்
மக்களாட்சி நடைபெறுகின்ற சுதந்திர நாட்டில் இதில் நம் கருத்துகளை தெரிவிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இதற்காக 40 கட்சிகளை கூட்டி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் சொன்னதை அடுத்து அவர் பணிந்துவிட்டார் என்று சொல்லுகிறார்கள். அவர் பணிந்துவிட்டார் என்றால் பிறகு எதுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும், விட்டுவிட வேண்டியது தானே.
Tamil Nadu Latest News: என்ன செய்கிறது திமுக?
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, வழிப்பறி என நடந்து வருவதோடு வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகிவிட்டது. இது பற்றி எதுவும் சொல்லவில்லை, குற்றவாளியை கண்டுபிடிக்கப்படவும் இல்லை. இதில் மும்முரம் காட்ட வேண்டும்.
தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர தமிழ் வளர்ந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களுக்கு சென்று தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தொடங்கிய ஹிந்தி பிரச்சார சபா 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள், மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற கொள்கையோடு திமுக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு ஏதாவது மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா... மத்திய அரசை எதிர்ப்பதற்கு தான் ஒரு மாநில அரசு என்று சொன்னால் இந்தியா எப்படி ஒற்றுமையுடன் இருக்கும்.
Tamil Nadu Latest News: அண்ணாமலையை முதல்வராக்க...
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவ குறித்து கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படுவேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக பொறுப்பேற்கும் ஆசை எனக்கு கிடையாது. அண்ணாமலை தலைமையில் அவரை முதல்வராக்க அனைவரும் பாடுபடுவோம்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | சென்னை நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பு.. புதிதாக 6 மண்டலங்கள் உருவாக்கம்!
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி - நடிகர் எஸ்.வி.சேகர்!
மேலும் படிக்க | ஒரு வீட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பரான மூன்று திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









