)
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பாசமுத்திரம் ஊர்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமை சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆயூஷ் குப்தா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.

மேலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த 25 முதல் 30 வரையிலான விளம்பர பதாகைகள் (standees) வைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், விவசாயம் மற்றும் அஞ்சல் துறை சார்பாக சிறிய கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப்படுள்ளது.
மத்திய திட்டங்களை பொதுமக்களுக்கும், மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. முகாமில் ஆதார் பதிவு, திருத்தம் செய்யும் அரங்கம், இந்திய அஞ்சல் துறையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு மற்றும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம், நிரந்தர சேமிப்பு போன்ற கணக்குகளை இலவசமாக தொடங்கி கொடுக்கப்பட்டது.

இன்றும் நாளையும் நடைபெறும் கருத்தரங்கில் அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மற்றும் அம்பை கல்லூரியில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ