Tamil Nadu Government News: ஓய்வூதியதாரர்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில், அவ்வப்போது அகவலைப்படி , நிலுவைத்தொகை, கருணைத்தொகை பற்றிய அறிவிப்புகளும், வாழ்வு சான்று சமர்ப்பிப்பது சார்ந்த தகவல்களும், ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் பற்றிய முக்கிய தகவல்களும், அந்த சலுகையை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறக்கூடிய "குறை தீர்ப்புக் கூட்டம்" பற்றிய அறிவிப்புகளும் மற்றும் அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" பற்றிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடைபெறக்கூடிய குடைதீர்ப்புக் கூட்டத்தின் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வண்ணம் "ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" நடைபெறுவதற்கு முன்பாக, தங்களது குறைகளை மனுவாக தெரிவிப்பதற்கான காலவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது குறிப்பிட்ட இந்த தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது முறையீடுகளை அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அதன் அடிப்படையில் அந்தந்த ஓய்வூதியதாரர்களின் அளிக்கும் புகார்கள் குறித்து குறைதீர்ப்புக் கூட்டத்தில் நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
அந்த வகையில் தற்போது ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வரும் 17 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, அதாவது மார்ச் மாதம் 17 ஆம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வு இயக்குனரால் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கலெக்டர் பொன்னையா வெளியிட்ட செய்தி குறிப்பு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருந்தால் அதற்கான முறையீட்டை மூன்று நகல்களில் காஞ்சிபுரம் கலெக்டருக்கு நாளை மார்ச் மாதம் ஒன்பதாம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இக்கூட்டத்தில் முறையீடுகளை தெரிவிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் சார்பாக ஒருவர் வீதம் பங்கேற்கலாம்.
அதேபோல வரும் ஒன்பதாம் தேதிக்குள் (மார்ச் 9) பெறப்படும் முறையீடுகள் மீது மட்டுமே சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பதில்கள் பெற்று குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: 65 வயதிலேயே இனி 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்
மேலும் படிக்க - ஓய்வூதியம் மற்றும் அரசு மானியங்கள் பெரும் வங்கி கணக்கு குறித்து RBI புதிய உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









