DMK Latest News: வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வரும் திமுக, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தங்கள் வேட்பாளர் பட்டியலில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குறிப்பா காலம் காலமாக தேர்தலில் போட்டியிட்டு வரும் சீனியர்களுக்கு பதிலாக, நிறைய புதுமுகங்களை திமுக தலைமை இந்த முறை களம் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2025 நாடாளுமன்ற தேர்தலில் கூட 11 எம்பிக்களுக்கு மறுபடியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே சமயம் ஒன்பது புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில், 2016-ல் போட்டியிட்ட நிறைய பேர் பேருக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்படியான ஒரு வாய்ப்பை இந்த முறை திமுக கொடுக்காது. வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் நிறைய புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் திமுக வாய்ப்பு தர திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியோகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர், திமுக தலைமைக்கு முக்கியமாக அறிவுறுத்திய ஒரு விஷயம் என்னவென்றால், 65 வயதுக்கு மேலானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டாம் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. இந்த முறை திமுக கண்டிப்பா ஆட்சியில் அமரும் என பல கருத்துக்கணிப்புக்கள் கூறியது.
இதனையடுத்து 10 வருடம் கழித்து திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளதால், இந்த முறை கண்டிப்பாக எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பல சீனியர்கள் தலைவர் ஸ்டாலினிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் பல சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது காலம் காலமாக எந்தெந்த சீனியர்களுக்கெல்லாம் எந்தெந்த தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதோ, அதே தொகுதியில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அப்படி கிடையாது. நிறைய மாற்றங்களை திமுக தலைமை கொண்டு வர இருக்கிறது. குறிப்பாக இந்தமுறை வேட்பாளர் தேர்வில் இருந்து கூட்டணி பங்கீடு வரைக்கும் துணை முதல்வர் உதயநிதியோட பங்கு அதிகமா இருக்கும். அதாவது அவரோட கை தான் ஓங்கி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினும் மேடைக்கு மேடை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், சீனியர்கள் வழிவிடணும் என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு மேடையிலையும், அதுவும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கூறி வருகிறார். சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றம் கூட அந்த அடிப்படையில் நடந்தது தான். குறிப்பாக புதிதாக போடப்படும் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் இளைஞர் அணியிலிருந்து கொண்டு வரப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நிறைய இளைஞர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே திமுகவில் சீனியர் ஜூனியர் மோதல் சத்தமில்லாமல் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.
அதற்கு ஒரு உதாரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு எழுதியிருக்கும் "கலைஞர் எனும் தாய்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டது. அப்பொழுது அவர் பேசும்போது, "திமுகவில் நிறைய பழைய மாணவர்கள் இருக்காங்க.. யாருமே ஃபெயில் ஆனவங்க கிடையாது.. எல்லாருமே நல்ல ரேங்க் எடுத்து கிளாஸ் விட்டு போகாம.. அதே கிளாஸ்லேயே இருக்காங்க.." எனக் கிண்டலாக பேசினார். இது பெரும் பேசுப்பொருளாக மாறியது. ரஜினிகாந்த் ஸ்டாலினோட எண்ணத்தை வெளிப்படுத்துகிறாரா? என கேள்விகள் எழுப்பட்டது.
ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞர்களை பாராட்டி பேசி வருகிறார். மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என சொல்லி வருகிறார். அதுமட்டுமில்லாமல் மற்ற கட்சிகளை பார்க்கும் போது, குறிப்பாக விஜய், அண்ணாமலை போன்ற இளம் தலைவர்கள் இருப்பதால், அவர்கள் கட்சியில் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
எனவே கலைஞர் மற்றும் ஸ்டாலின் காலத்தில் பார்த்த முகங்களுக்கு பதிலாக இளம் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால், வருங்கால திமுகவுக்கு தலைமை ஏற்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள் மத்தியில் இணக்கமாக பேச முடியும். தன்னோட வயதை ஒட்டி இருக்கும்போது கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் மேற்கொள்வது ரொம்ப சுலபமாக இருக்கும்.
இதன் காரணமாக தான் திமுகவில் எல்லா மட்டத்துலையும் இளைஞர்களை கொண்டு வர வேண்டும் என உதயநிதி ரொம்ப திட்டவட்டமாக இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. எனவே வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஜூனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
மேலும் படிக்க - பிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ
மேலும் படிக்க - பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









