)
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தனது சுற்று பயண அனுபவங்களை வெளிப்படுத்தி, வாரந்தோறும் 4 முதல் 5 நாட்கள் வெளியூர் மாவட்டங்களைச் சுற்றி மக்களிடையே நேரடியாக வருகை தந்துகொண்டு, அவர்களின் குறைகளை கேட்பதாக தெரிவித்து இருக்கிறார். "சனிக்கிழமைக்கு மட்டும் வெளியே வர ஆள் கிடையாது. ஞாயிற்றுக்கிழமையிலும் பொழுதுபோக்கு செய்கிறேன்" என அவர் கூறி இருக்கிறார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்டம் வாரியாம் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் "வீக் எண்ட் பாலிடிக்ஸ்" செய்கிறார் என்ற விமர்சனம் வலம் வருகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே இப்படியான விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. முதலில் வீட்டில் இருந்து வெளியே வராமலேயே அரசியல் செய்கிறார் (work form home politics) என்றும் தற்போது சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்கிறாராம் என்றும் விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் தான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யை விமர்சித்து இருக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தேசிய, சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்ற 819 வீரர்களுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத் தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, "தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை 1.20 கோடி மகளிருக்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார். நான் பல மாவட்டங்களுக்கு சுற்று பயணம் செல்கிறேன். அங்கு மக்கள் நம்மிடம் மனுக்கள் கொடுக்கிறார்கள். அப்போது மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு, அதிகாரிகளிடம் கொண்டு செல்ல முயல்கிறேன். வாரத்தில் 4, 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் நான் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியே சுற்றிக்கொண்டுதான் இருப்பேன்.
பலர் சிரித்த முகத்தோடு, ரூ.1,000 வரவு வச்சிருக்கு, நன்றி என்றே கூறுகிறார்கள். இந்த தொகை உடல் நலத்திற்கு மாத்திரை வாங்கவும், குழந்தைகளுக்கு கல்வி செலவும் பயன்படுகிறது. தமிழ்நாடு மத்திய அரசிடம் ரூ.55 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வரியாக கட்டி உள்ளது. ஆனால் கல்வி நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் நுழைக்கப்படுகிறது. இது குலக்கல்வி திட்டத்துக்கான அடிப்படை என்று நான் பார்க்கிறேன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ