Tamil Nadu unemployment allowance : செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.10.2025 முதல் 31.12.2025 வரையிலான காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, நாளது தேதி வரை பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 30.09.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடைமருத்துவம், விவசாயம், சட்டம், B.Sc. Nursing போன்ற தொழில் பட்டப்படிப்புகள் (PROFESSIONAL DEGREE) முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் உதவித்தொகை பெற்று வருபவர்கள் மற்றும் தனியார் துறையில்
பணிபுரிபவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள மனுதாரர்கள் (பொதுப்பிரிவினர்) தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்குட்பட்டும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குட்பட்டும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு ஏதுமில்லை.
அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர். உதவித்தொகை விவரம் :
1. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு - மாதம் ரூ.600/-
2. +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு - மாதம் ரூ.750/-
3. பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்கு - மாதம் ரூ:1,000/-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விவரம் :
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் - மாதம் ரூ.200/
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் - மாதம் ரூ.300/-
3. +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு - மாதம் ரூ.400/-
4. பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்கு - மாதம் ரூ.600/-
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள். தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2025-ம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | மாதம் ரூ.8000 பென்சன் பெற விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









