'என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது, ஆனால்...' தேர்தலை குறிவைத்து அமித்ஷா பேச்சு!

Amit Shah Madurai Speech: காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்... தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 8, 2025, 08:06 PM IST
  • திமுக ஊழல், ஊழல் என ஊறிபொய் உள்ளது - அமித்ஷா
  • உயர்கல்வியை ஏன் தமிழில் இயக்க மறுக்கிறீர்கள்...? - அமித்ஷா
  • ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைத்தது - அமித்ஷா
'என்னால் திமுகவை தோற்கடிக்க முடியாது, ஆனால்...' தேர்தலை குறிவைத்து அமித்ஷா பேச்சு!

Amit Shah Madurai Speech: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 8) மதுரைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, அவர் மதுரை மினாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

Add Zee News as a Preferred Source

தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Amit Shah Madurai Speech: அண்ணாமலை பெயருக்கு ஆரவாரம்...

இந்த கூட்டத்தின் மேடையில், மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பாஜக மாநிலத் தலைவர், நிர்வாகிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும் கூட்டத்தில் கோஷமிட்டு நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர்.

Amit Shah Madurai Speech: முருகன் மாநாடு

தொடர்ந்து பேச தொடங்கிய அவர், "மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து இந்த உரையை தொடங்குகிறேன். இந்த மண்ணின் சொக்கநாதர், கள்ளழகர், முருகனை வணங்குகிறேன். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மக்களை சந்தித்து தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து வருந்துகிறேன்.

மதுரை 3 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மாநகரம். இந்த மண்ணின் மைந்தன் பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன். முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டை வெற்றிகரமானதாக மாற்ற நீங்கள் உதவ வேண்டும். இந்த கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும்.

Amit Shah Madurai Speech: 'திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்'

2026ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். நான் டெல்லியில் இருந்தாலும் தமிழ்நாடு மீதுதான் என் காதுகள் இருக்கும். தமிழக முதல்வர் கூறுகிறார், 'அமித்ஷா அவர்களால் திமுகவை தோற்கடிக்க முடியாது' என்று... அது உண்மைதான், ஆனால் மக்கள் உங்களை தோற்கடிக்க காத்து கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நாடி துடிப்பாக சொல்கிறேன் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்.

வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய அரசின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைத்தது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து எதிர் நாட்டிற்கு உள்சென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். இதுதான் மோடி அரசு.

Amit Shah Madurai Speech: 2026இல் தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில்...

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய அரசு பதிலடி கொடுத்தது இல்லை. ஆனால், பாஜக அரசு ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல், சார்ஜிகள் ஸ்ட்ரைக் ஆகியவற்றை நடத்தி இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்.

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பாஜக பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டில் டெல்லியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைந்துள்ளது. 2025 டெல்லியில் பாஜக ஆட்சி எப்படி அமைத்ததோ... அதேபோல் 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். உங்கள் காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.

Amit Shah Madurai Speech: 'பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை'

ஊழல், ஊழல் என ஊறிபொய் உள்ளது. மக்களுக்கான ஒதுக்கப்படும் திட்டங்களையும், நிதியையும் தமிழகத்தில் திமுக அரசு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. டாஸ்மாக்கில் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து சட்டவிரோத ஆட்சியை தமிழகத்தில் செய்து வருகிறது. திமுக அரசு 100க்கும் 100 சதவீதம் தோல்வியை தழுவியது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறும் அரசு 10 சதவீதம் நிறைவேற்றிவிட்டு 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறி வருகிறது. தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்து சொல்லுங்கள்... எத்தனை வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று...?
இந்த ஆட்சியில் ஜாதிய மோதல் நடைபெறுகிறது, பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. வேலை இல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். 

Amit Shah Madurai Speech: 'தமிழக அரசுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்...'

1000 ஆண்டுகள் பழைமையான முருகன் கோவிலை சிக்கந்தர் மலை என கூறுவதற்கு திமுக அரசுக்கு துணிச்சல் வந்துள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டில் கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு நான் ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். உயர்கல்வியை ஏன் தமிழில் இயக்க மறுக்கிறீர்கள்...? உடனடியாக மருத்துவம், பொறியியல் பட்ட படிப்புகளை தமிழில் மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின் மரபை நாட்டின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற மோடிக்கு ஒரு நன்றி கூறினீர்களா...? இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு செல்கிறது. 11 ஆண்டுகள் மோடி ஆட்சியில் சாதனை செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் 1.53 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது., ஆனால் மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது. 

பெருந்திரளாக வந்துள்ள தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உங்கள் நினைவில் இருக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த நீங்கள் அனைவரும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற  நீங்கள் அனைவரும் தயாரா இருக்கீறீர்களா...? உங்கள் கைகளை உயர்த்தி கூறுங்கள்" என அமித்ஷா கூறினார். தொடர்ந்து பாஜக தொண்டர்கள் அதற்கு கோஷமிட்டனர்.

மேலும் படிக்க | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்

மேலும் படிக்க | இளையராஜா காலில் விழுந்து வணங்கிய அண்ணாமலை

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News