விவசாயிகளுக்கு வந்திருக்கும் அவசர செய்தி உடனே இதை செய்யவில்லை என்றால் பி எம் கிசான் தொகை வராது

PM Kisan : பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 23, 2025, 06:55 AM IST
  • பிஎம் கிசான் குறித்த முக்கிய அறிவிப்பு
  • விவசாயிகள் இதை உடனே செய்ய வேண்டும்
  • மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே காலவகாசம் உள்ளது
விவசாயிகளுக்கு வந்திருக்கும் அவசர செய்தி உடனே இதை செய்யவில்லை என்றால் பி எம் கிசான் தொகை வராது

PM Kisan Scheme : இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கும் முக்கிய அறிவிப்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கௌரவ உதவித் தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள். வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித் தொகை விவசாயி அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என இணைய வழியில் பதிவு செய்து மத்திய அரசு பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. விவசாயிகள் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடையகூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத் துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்று நர்கள். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இ-சேவை மையங்கள் ஆகிய துறையினர் வாயிலாக. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு எண் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெறும் விவசாயிகள் 41973 விவசாயிகளில் 16250 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 25723 விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களையோ தொடர்பு கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் செயலியில் பதிவேற்றம் செய்து தனி அடையாள எண் வழங்கப்படும்.

இதுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20 வது தவணை ஊக்கத் தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20 வது தவணை வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே விவசாயிகள் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெற விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும். 

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000/- நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒன்றிய அரசால் வேளாண் அடுக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் 20ஆவது தவணைத் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 23,033 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் 15,604 விவசாயிகள் மட்டுமே இதுவரை தனிப்பட்ட அடையாள எண் பெற்றுள்ளனர். 

மீதமுள்ள 7429 விவசாயிகள் வேளாண் அடுக்க தனிப்பட்ட அடையாள எண் பெறாமல் உள்ளனர். இவர்கள் வருகிற 31.03.2025க்குள் அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம். கிசான் மற்றும் பயிர் காப்பீடு திட்ட பலன்கள் கிடைக்கப்பெறும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை அணுகி இலவசமாக அடையாள எண் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த அடையாள எண் பெற தங்கள் நில ஆவணங்கள் (கணினி சிட்டா, பட்டா), ஆதார் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் சென்று அருகில் உள்ள பொதுசேவை மையத்திலோ அல்லது தங்கள் வேளாண்மை விரிவாக்கப் பணியாளரை அணுகியோ பதிவு செய்து விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!

மேலும் படிக்க | PM கிசான் சம்மான் நிதி... உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை அறிய

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News