Ration Card News : ரேஷன் கார்டுடன் Aadhaar-ஐ இணைக்க e-KYC செய்யாமல் இருந்தால், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம். இதன் விளைவாக, இலவச அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உங்களுக்கு கிடைக்காமல் போகும். அதனால் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது வீட்டில் இருந்தேகூட உங்கள் ரேஷன் கார்டில் செய்ய வேண்டிய e-KYC அப்டேட்டை செய்து விடவும். வீட்டிலிருந்தே எளிதாக e-KYC செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
ரேஷன் கார்டு e-KYC ஏன் அவசியம்?
போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும் (Duplicate/Fake Cards), தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கிடைப்பதை (Targeted PDS System) உறுதி செய்யவும், நியாவிலைக் கடைகளில் வெளிப்படைத்தன்மை (Transparency in PDS) கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
e-KYC செய்வதற்கான எளிய வழிமுறைகள் (Online Method)
1. உங்கள் மாநில ரேஷன் கார்டு போர்டலுக்குச் செல்லவும்
தமிழ்நாடு: https://tnpds.gov.in
கேரளா: https://www.civilsupplieskerala.gov.in
கர்நாடகா: https://ahara.kar.nic.in
மகாராஷ்டிரா: https://www.mahafood.gov.in
உதாரணமாக Google-ல் " Tamilnadu ration card portal" என்று தேடினால் உங்கள் மாநிலத்தின் ரேஷன் கார்டு இணையதளம் கிடைக்கும்.
2. லாக் இன் செய்யவும்
உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு உள்நுழையவும்.
புதியவரா? "புதிய பயனர்" (New User) என்பதைத் தேர்ந்தெடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.
3. e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
"Aadhaar Linking" அல்லது "e-KYC Update" என்ற விருப்பத்தைத் தேடுங்கள்.
4. ஆதார் விவரங்களை உள்ளிடவும்
உங்கள் 12-இலக்க ஆதார் எண் (Aadhaar Number) உள்ளிடவும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிடவும்.
5. புகைப்படம் & ஆவணங்களை அப்லோட் செய்யவும்
சில போர்டல்களில் புதிய புகைப்படம், வாக்குமூல அட்டை (Residence Proof) போன்றவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
6. e-KYC-ஐ சமர்ப்பிக்கவும்
"Submit" அழுத்திய பிறகு, உங்கள் மொபைலுக்கு "e-KYC Successful" என SMS வரும்.
Offline முறை: உங்கள் அருகிலுள்ள PDS கடை/சிவில் சப்ளை அலுவலகத்தில் செய்யலாம்
ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண்ணுடன் ரேஷன் கடைக்குச் செல்லவும்.
பயோமெட்ரிக் உறுதிப்படுத்தல் (Fingerprint/Iris Scan) செய்யவும்.
முக்கிய குறிப்புகள்:
- மார்ச் 31, 2025க்குள் e-KYC முடிக்கவும்.
- ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு இலவசம், எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டாம்.
- OTP/ஆதார் விவரங்களை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் (Fraud Alert!).
உதவிக்கு உங்கள் மாநிலத்தின் தொலைபேசி எண் (Toll-Free No.) அல்லது ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









