)
Vaiko : வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி தனியார் பல்கலைக்கழகத்தில் நாவலர் செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியமன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவானது வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம்,சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ வழக்கறிஞர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், இப்போதெல்லாம் தொண்டர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிகிறது. ஆனால் அண்ணா காலத்தில், உலகச் செய்திகளை கடிதம் மூலம் தொண்டர்களிடம் அனுப்பினார். அண்ணா கூறிய பெரியார் கனவை, கலைஞர் சட்டங்களாக மாற்றினார். இயக்கத்தில் பிளவு வந்தாலும், கொள்கையில் ஒருமைப்பாடு இருந்தது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பார்ப்பனிய சக்திகள், இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் ‘சந்திரப்பவாத’ வகையில் தமிழகத்தில் நுழைய முயல்கின்றனர் என கூறினார். அவர்கள் மனப்பாலை குடிக்கிறார்கள் என கூறிய வைகோ, ஒருவர் பெரியார் சிலையை உடைப்பேன் என மிரட்டுகிறார், நாள் குறித்துவிட்டு வந்தால், அவரது கையை துண்டாக்குவேன் என கடுமையாக பேசினார். இது பகிரங்க எச்சரிக்கை என்றும் தெரிவித்தார்.
மேலும், வைகோ பேசும்போது, " இன்றைய காலக்கட்டத்தில் தொண்டர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிகிறது. ஆனால் அண்ணா காலத்தில், உலகச் செய்திகளை கடிதம் மூலம் தொண்டர்களிடம் அனுப்பினார். அண்ணா கூறிய பெரியார் கனவை, கலைஞர் சட்டங்களாக மாற்றினார். இயக்கத்தில் பிளவு வந்தாலும், கொள்கையில் ஒருமைப்பாடு இருந்தது.
இப்போது, பார்ப்பனிய சக்திகள், இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் ‘சந்திரப்பவாத’ வகையில் தமிழகத்தில் நுழைய முயல்கின்றனர். அவர்கள் மனப்பாலை குடிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் பெரியார் சிலையை உடைப்பேன் என மிரட்டுகிறார். நாள் குறித்துவிட்டு வந்தால், அவரது கையை துண்டாக்குவேன். நான் அங்கு இருப்பேன். இது ஒரு பகிரங்க எச்சரிக்கை, செய்யவும் செய்வேன்.”
மேலும், “இது திராவிட இயக்கத்தின் ஆட்சி. பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நிலைநாட்டும் இயக்கம். முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் ‘இந்த அரசாங்கமே பெரியாருக்குக் காணிக்கை’ என்று பேசியது இன்று நினைவுகூரத்தக்கது” என்றும் வைகோ வலியுறுத்தி பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ