)
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் பேரணியை பீகாரில் ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். இந்த யாத்திரையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடியை சிலர் தவராக பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை அவமதிக்கும் செயல் என வானிதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரையில், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தாயாரை இழிவுபடுத்தி சிலர் கோஷமிட்டுள்ளனர். அதை கண்டிக்காமல் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ரசித்துள்ளனர்.
140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் தலைமகன் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தாயார் 100 வயது வரை வாழ்ந்து மறைந்தவர். மகள் 12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராகவும், அதன் பிறகு பிரதமரான பிறகும், குஜராத்தில் உள்ள தனது வீட்டில் மிகமிக எளிமையாக வாழ்ந்தவர். எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர். பிரதமரின் தாய் தேசத்திற்கே தாய் போன்றவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் போடுவதும், அதை ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் ரசிப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரஸின் வெறுப்பு அரசியலை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது.
பிரதமர் பதவியை தனது குடும்பச் சொத்தாக நினைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியின் கனவை தகர்த்தவர் பிரதமர் மோடி. அந்த விரக்தியில் பல்வேறு பொய்களை பரப்பி நாட்டில் வன்முறையை தூண்ட கலக யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். அதில்தான் பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியுள்ளனர். பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது தேசத்தை இழிவுப்படுத்தும் செயல். இதற்காக ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸின் அறுவெறுக்கத்தக்க வெறுப்பு அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ