)
துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் எஸ்.கே. குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர்ச் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர் அருகே மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாமூல் கேட்டு மிரட்டியதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் எஸ் கே குமார் என்பவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரை துப்பாக்கி தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் என்பவர் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணவாள நகர் காவல் துறையினர் விசிக நிர்வாகி எஸ்.கே. குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடந்த 17ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் விசிக பிரமுகர் எஸ்.கே. குமார் தொழிற்சாலை முன்பு டவேரா வேனில் மூன்று பேருடன் சென்று இறங்கி தொழிற்சாலை கேட் முன்பு நின்று நிர்வாகி வெளியில் வரவழைத்து பேசுவதும், அந்த நிர்வாகி கோபத்துடன் கிளம்பிச் செல்வதும் உள்ளிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசிக பிரமுகர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ