சர்வதேச மகளிர் தின விழா சென்னையில் நேற்று (மார்ச் 08) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சித்துள்ளார். அந்த விழாவில் பேசிய திருமாவளவன்,தற்போது கட்சி ஆரம்பித்துவிட்டாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம் வாக்குகளை பெறுவார், 24 சதவீதம் பெறுவார் என்று எல்லாம் எழுதிகிறார்கள்.
அடுத்த முதலமைச்சர் இவர் தான் என ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் ஊடகமும் எத்தகையான அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிங்க: திமுகவை திட்டிய விஜய்... உடனே அட்டாக் செய்த மேயர் பிரியா - என்ன சொன்னார்?
இப்படியான சமூகத்தில் தான் போராடி போராடி போராடி.. இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை நாம் பெற்று இருக்கிறோம். மற்றவர்கள் 100 மீட்டர் ஓடி பரிசு பெற்றால் நாம் 10,000 மீட்டம் ஓட வேண்டி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஏற்காமல் புறந்தள்ளும் சூழலில் இருக்கிறோம்.
நாம் நமது வாக்கு வங்கியை வலிமை பெற செய்ய வேண்டும். அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்று தொடர்ந்து சட்டசபையிலும், லோக்சபாவிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான், அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க முடியும் என பேசினார்.
முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டதால், அந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உருப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்பதை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: அண்ணாமலை vs சசிகாந்த் செந்தில் : மத்திய அரசு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தோற்பது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









