Vellum Pengal : தமிழ்நாடு அரசு சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சி நடத்தியது.’வெல்லும் பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த விழாவில் அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்த பெண்கள், தங்களின் வாழ்க்கையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உணர்ச்சிகரமாக பகிர்ந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவம்
தளி வட்டாரத்தைச் சேர்ந்த குடைகரை மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடலின் ஒரு பகுதி முழுவதும் செயலிழந்துவிட்டது. அவருக்கு அரசின் மக்களை தேடி மருத்துவம் மூலம் இயன்முறை மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தனர். இதனால், அப்பெண் உடல் செயலிழப்பில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். சென்னையில் நடந்த வெல்லும் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண் ஒருவர் 10வது பிரசவ காலத்தில் ரத்தம் குறைவாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். மலைவாழ் மக்கள் என்பதால் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என பயந்து இருந்துள்ளார். அப்போது அரசு மருத்துவர்கள் மலையில் இவர்கள் வசிக்கும் இடத்துக்கு 4 கிமீ நடந்து சென்று அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவர்களைப் பார்த்து பயந்து இருந்த அவரை, மாவட்ட ஆட்சியர் உத்தரவுடன் போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரி அழைத்து வந்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இதனை மழைவாழ் பெண்ணே அரசின் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
புதுமைப் பெண் திட்டம்
இப்போது அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த பெண் ஒருவர் பேசும்போது, " பொருளாதாரத்தின் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தபோது, புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைத்த ரூ.1000 கல்லூரி படிக்க முடிக்க உதவியது. இப்போது அரசின் தோழி விடுதியில் தங்கி சென்னையில் பணியாற்றி வருகிறேன்’ என கூறினார். அதேபோல் பாலின வள மையத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களைக் கூறியதுடன், இப்போது அரசு சார்பில் பிரச்சனைகளுக்கு எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவி வருவதை குறிப்பிட்டார்.
அரசு மருத்துவர்கள் சாதனை
இந்த நிகழ்ச்சியில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துண்டான கையை, பெண் மருத்துவர்களே ஒன்றிணைந்து பொருத்தி செய்த சாதனையை பகிர்ந்து கொண்டனர். இந்தியாவிலேயே இதன் முதன்முறையாக செய்யப்பட்ட சாதனை எனக்கூறிய பெண் மருத்துவர்கள் இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் என பெருமிதம் கொண்டனர்.
வெற்றி நிச்சயம் திட்டம்
மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் படித்து பலனடைந்துள்ளார். திருமணமாகி வீட்டில் இருந்தபோது, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், அத்திட்டத்தின் கீழ் கொடுத்த பயிற்சியில் இப்போது தன்னுடைய படிப்பு கனவை நிறைவேறிக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், இதனை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி நின்று ஜெயிச்சிட்டேன் முருகா என சொல்லிவிட்டு தான் இங்கே வந்திருப்பதாகவும் அப்பெண் தெரிவிக்கும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : 17 லட்சம் தகுதியான பெண்களை அரசு எப்படி தேர்வு செய்தது?
மேலும் படிக்க: ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தமிழ்நாட்டு மக்களே உங்களுக்கான நல்ல வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









