வெளுத்து வாங்கப்போகும் மழை.. 10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! விரைத்த பேரிடர் மீட்பு குழு

TN Weather Update: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழு 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். 

Written by - R Balaji | Last Updated : Nov 16, 2025, 11:25 AM IST
  • 10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
  • பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது
  • வானிலை எச்சரிக்கை
வெளுத்து வாங்கப்போகும் மழை.. 10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! விரைத்த பேரிடர் மீட்பு குழு

TN Weather Update: இம்மாதம் தொடக்கத்தில் மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், அது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

Add Zee News as a Preferred Source

Heavy Rain Alert: இரண்டு நாட்களுக்கு மிக கனமழை 

இதன் காரணமாக இன்று (நவம்பர் 16) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (நவம்பர் 17) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Heavy Rain Alert: 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மிட்பு குழு

இந்த நிலையில், மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழு படையினர் விரைந்துள்ளனர். இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கும் நாளை (நவம்பர் 17) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆசிய 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். 

மேலும், இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டாலும் உணவு தேவை இருந்தாலும் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

மேலும் படிக்க: நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியை எதிர்த்து... உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மேலும் படிக்க: 4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News