)
TVK Vijay Latest News Updates: தவெக தலைவர் விஜய் இன்று காலையில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், விசிக ஆதரவு இன்னும் உறுதியாகவில்லை. இதனால், விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அமமுக எம்எல்ஏ உடன் குதிரை பேரம் நடத்தியதாகவும் தவெக மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெகவிடம் ஏற்கெனவே 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து தனது முழு ஆதரவையும் அளித்தது, இதனால் தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது. நேற்று (மே 8) சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கினர். இதனால், தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது.
ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை, இன்னும் விசிக தனது ஆதரவு கடிதத்தை தவெகவுக்கு அளிக்கவில்லை. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவு என தகவல்கள் பரவிய நிலையில், அக்கட்சி ஆதரவு அளிக்கவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எனவே தற்போது வரை தவெகவின் பலம் 116 ஆக மட்டுமே உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தவெக தலைவர் விஜய் நேற்றிரவு ஆளுநரை 3வது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அச்சந்திப்பில் 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 9) காலையில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், விசிகவின் ஆதரவு கடிதம் இன்னும் கிடைக்காத நிலையிலும், ஐயூஎம்எல் ஆதரவு அளிக்காத நிலையிலும் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. மேலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆளுநரும் ஆட்சியமைக்க விஜய்யை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை விசிகவின் நிலைப்பாட்டு அதன் தலைவர் திருமாவளவன் இன்று காலையில் அறிவிக்கும்பட்சத்தில், விஜய் பதவியேற்பாரா இல்லையா என்பது உறுதியாகும்.
இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரை நேரில் சந்தித்து, அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினார். அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார், டிடிவி தினகரன்.
#WATCH | AMMK general secretary T.T.V. Dhinakaran says, "I am supporting AIADMK. I have submitted this letter in support of Edappadi Palaniswami to form the Govt. Our MLA Kamaraj has also signed it and sent it through my secretary. When I saw TVK, I was shocked. because there was… https://t.co/zgMgkKzpQk pic.twitter.com/wXN14B2ueS
— ANI (@ANI) May 8, 2026
இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்து டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சிகர தகவலை அளித்தார். மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ்-ஐ காணவில்லை. அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, விஜய் குதிரை பேரம் நடத்தியிருக்க வேண்டும், அல்லது விலை போயிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.
அடுத்து நள்ளிரவில், அமமுக எம்எல்ஏ காமராஜ் நேரில் வந்து, தான் தவெகவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் இன்னும் டிடிவி தினகரன் உடன் தான் இருக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு எந்த கடிதத்தையும் அளிக்கவில்லை என்றும், அனைத்தும் வதந்தி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவுக்கு சுயநினைவுடன் எழுதிய கடிதம் குறித்த வீடியோவை தவெக வெளியிட்டது. மேலும் தவெக அளித்த விளக்கத்தில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.
#WATCH | TVK shares a video of AMMK MLA Kamaraj, saying "These are the video visuals of AMMK MLA Kamaraj voluntarily and happily writing a letter expressing his support for the Tamilaga Vettri Kazhagam. He had stated that he was extending support to the Tamilaga Vettri Kazhagam… pic.twitter.com/sM3xtyXx12
— ANI (@ANI) May 8, 2026
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன், ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.