திமுகவை மக்கள் தூக்கி எறிவது உறுதி - விஜய் தாக்கு!

Vijay Attacks DMK: கரூர் குவாரியில் செய்தியாளர் ஒருவர் மீது தாக்குதல் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Feb 4, 2026, 06:02 PM IST
  • கரூர் குவாரியில் செய்தியாளர் மீது தாக்குதல்
  • தவெக விஜய் கண்டனம்
திமுகவை மக்கள் தூக்கி எறிவது உறுதி - விஜய் தாக்கு!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. அங்கு சமீபத்தில் செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சென்றுள்ளனர். இந்த சூழலில், அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

படுகாயம் அடைந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் இரண்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செய்தியாளர் மீது திமுக எம்.எல்.ஏ நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

தவெக தலைவர் விஜய் கண்டனம் 

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. 

குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. 

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும். ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி 

தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: பெண்களுக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசின் குட் நியூஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News