மதுரைக்கு வரும் அமித்ஷா.. விஜய் சந்திக்கிறாரா? நயினார் நாகேந்திரன் பேட்டி!

Nainar Nagendran press meet: மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தரும்போது தவெக தலைவர் விஜய் அவரை சந்திக்க வாய்ப்புள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 6, 2025, 08:15 PM IST
  • அமித்ஷாவை சந்திக்கிறாரா விஜய்
  • நயினார் நாகேந்திரன் பதில்
மதுரைக்கு வரும் அமித்ஷா.. விஜய் சந்திக்கிறாரா? நயினார் நாகேந்திரன் பேட்டி!

ஈரோட்டின் சோளங்காபாளையத்தில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Add Zee News as a Preferred Source

அப்போது பேசிய அவர், அன்பிற்குரிய அக்கா சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை வைரஸ் யூரோமோனஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது வருத்தத்திற்குரியது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அமித்ஷா மதுரைக்கு 7ம் தேதி இரவு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி, அதனை அகற்ற அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். விஜய்க்கு அந்த எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும். இதற்குமுன்பு கூட ஒருமுறை சொல்லியிருந்தேன். அதற்கு பதில் இனிதான் வரும் என எதிர்பார்க்கிறேன்‌ என கூறினார். 

கமலின் சர்ச்சை பேச்சு குறித்து அவரிடம் கேட்கும்போது, இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள் பேசுகின்ற மக்கள் உள்ளனர். அவரவருக்கு அவர்கள் பேசும் மொழி பெரிது. அவரவர் தாய்மொழியை உயர்த்தி பேசுவது தவறில்லை. கமல் தாய்மொழியை உயர்த்தி பேசியது வரவேற்கதக்கது. மற்ற மொழியுடன் ஒப்பிட்டு பேசுவது பொருந்தாது என்றார். 

அண்ணாமலை அறிவித்த 48 மணிநேரம் கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளது குறித்த கேள்விக்கு, "விரைந்து முடிக்க வேண்டிய அளவிற்கு ஞானசேகரன் வழக்கை போல் நிறைய நிலுவையில் உள்ளன. 2024 ஒரத்தநாடு பெண்ணை பாலியல் செய்துள்ளனர். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவருடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 10 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு வழக்கு உள்ளது‌.

தோட்டத்தில் தங்கவே பயப்படுகின்றனர். பழைய காலத்தில் கேள்விப்பட்ட விஷயம். சிவகிரி இரட்டை கொலை வழக்கில் பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் 19 கொலைகள் செய்துள்ளதாக கூறுகின்றனர். காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்திருக்க முடியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? 19 கொலைகளை ஒப்புக் கொண்ட நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டது யார்? காவல்துறை தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை.

புலன் விசாரணை சரியில்லை. காவல்துறையினரை வைத்துள்ள முதல்வர் சரியாக செயல்பட முடியவில்லையா? தமிழகத்தில் போதைப் பொருள் கஞ்சா பாலியல் படுகொலை சட்ட ஒழுங்கு சரியில்லை உள்ளிட்டவைகள் திறமையின்மையால்தான் நடக்க முடியும் என்றார்.

மேலும் படிங்க: 2027இல் சென்சஸ் நடந்தால்... தமிழ்நாட்டுக்கு ஏன் ஆபத்து? புட்டுபுட்டு வைத்த ஸ்டாலின்

மேலும் படிங்க: கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு.. தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News