இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. Virtual வாரியர்ஸ் - ஆட்வைஸ் கொடுத்த தவெக விஜய்!

இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. விர்ச்சுவல் வாரியர்ஸ் என தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளை கூறியுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 19, 2025, 05:23 PM IST
இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. Virtual வாரியர்ஸ் - ஆட்வைஸ் கொடுத்த தவெக விஜய்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவர் விஜய். இவருக்கு என தனி ரசிகர் பட்டாலமே உள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியலில் நுழைவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்க உள்ளது. தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லை என்பதால் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். 

Add Zee News as a Preferred Source

சமீபத்தில் தவெக-விற்கு மாவட்ட செயலாளர்கல் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தலா 2 தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்ட செயலாளர் என இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 6 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 19) தமிழக வெற்றிக்கழக கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் ஏராளமான நிர்வாகிகளும் பங்கேற்று இருந்தனர். 

இதில் கட்சி 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்டத்தின்போது, அக்கட்சி தலைவர் விஜய் ரெக்கார்டு செய்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில், ஹாய்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. மீட்டிங் நடக்கும்போதே நான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கு கொஞ்சம் நெட்வொர்க் பிரச்சனை. அதனால் தா என்னால் பேச முடியவில்லை. வீடியோ ரெக்கார்டு செய்து அனுப்பி இருக்கிறேன். 

உங்கள் எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படையாக கூறுகிறார்கள். இதனை நாம் சொல்வதை விட மற்றவர்கள் சொல்கிறார்கள். இனிமேல் நீங்க எல்லாரும் சோஷியல் மீடியா ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. நீங்கள் எல்லாரும் நம் கட்சியுனுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். இப்படிதான் உங்கள் எல்லாரையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 

தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் என்று சொன்னாலே கண்ணியத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று எல்லாரும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி நீங்க நடந்துக்கொள்ள வேண்டும். உங்களை விரைவில் பார்க்க வருகிறேன். அதுவரைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம் இவ்வாறு விஜய் அந்த வீடியோவில் பேசி இருந்தார். 

மேலும் படிங்க: முதியோர் ஓய்வூதியம் பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதா?

மேலும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் - பாஜக சார்பில் திட்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News