)
தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை அல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தென் மாவட்ட மக்களை கவரும் வகையில் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வாகனங்களை எந்த வழியாக வரவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான பேர் ஒரே இடத்தில் கூட உள்ளதால் போக்குவரத்து பிரச்சனைகளை தவிர்க்க காவல்துறை பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு ஏற்றவாறு பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் (பார்க்கிங் 1):
மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் (பார்க்கிங் 1ஏ):
வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் (பார்க்கிங் 2 மற்றும் 3):
சென்னை, விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு வழியாக பாரபத்தியில் உள்ள மாநாட்டு திடலை அடையலாம்.
மாநாடு நடைபெறும் அன்று கனரக வாகனங்கள் இந்த பாதைகளை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், திருமங்கலம், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாகப் பயணிக்க வேண்டும். இதேபோல், மேற்கு மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை செல்லும் வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி வழியாக செல்ல வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை சார்பில் இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு வந்தவர்கள் சிலர் விபத்தில் சிக்கி இறந்ததால் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. மேற்கூறிய அனைத்து மாற்று வழி தடங்களும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி மட்டுமே அமலில் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ