)
Vijay Likely to remove Bussy Anand as TVK General Secretary: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இன்று நவம்பர் 05 மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடிகர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், கூட்டணி நிலைப்பாட்டையும் குறித்து முக்கியமான ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாக கட்சித் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த கூட்டத்திற்கு முன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கட்சிக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள நிலைமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தின் பதவியை பறிக்க வேண்டும் எனக் கூறும் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்து உள்ளனர். மேலும், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் அதிருப்தி
இதுகுறித்து கட்சியின் தலைவரான விஜய் கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியதாகவும், புஸ்ஸி ஆனந்தின் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதோடு, விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை கட்சியின் ஆலோசகராக அல்லது அவை தலைவராக வரலாம் என பேச்சுக்கள் வலுப்பெறுகின்றன.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் விஜய்யின் மனதில் இன்னும் பேரதிர்ச்சியாகவும் ஆறாத காயமாகவும் உள்ளன. இந்த சம்பவத்திற்கு பின் அவர் எந்த பொதுக் கூட்டத்திலும் கலந்துக்கொள்ளவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக நிர்வாகிகள் சிலர் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்தன. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சரியான செயல்பாட்டை கணக்கில் நிறுத்தவில்லை, கட்சியின் எதிர்கால பாதையை பாதிக்கலாம் என்று ஆதரவாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தளபதி உடன் தீய சக்தி
பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது சமூக ஊடகங்களில் “தளபதி உடன் தீய சக்தி” என விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. கட்சியின் தெண்டர்கள், வர்ச்சுவல் வாரியர்ஸ் ஆகியோரின் நம்பிக்கையை புஸ்ஸி ஆனந்த் இழக்க செய்தார் என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில், மாமல்லபுரத்தில் கட்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியிலோ அல்லது இதன் பின்னரோ கட்சியில் தலைமை பொறுப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ