)
Vinayagar Chaturthi : விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாட்டில் இன்று முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு முக்கிய விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளின் மாசுபாட்டை தவிர்க்கும் பொருட்டு, இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு கேடான சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை. சிலை அமைவிடம், ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க எடுத்துச் செல்லும் பொதுமக்கள் அரசின் இந்த விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பட்டாசு வெடிக்க தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 27.08.2025 அன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்பொருட்டு தொடர்புடைய துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்றத்தின் பின்வரும் வழிகாட்டுதல்களை வழுவாது பின்பற்றிட மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகள் வெடிப்பதற்கு அனுமதியில்லை. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பாதிப்பில்லாவண்ணம் கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலை கரைப்பதற்கான விதிமுறைகள்
* மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை.
* நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சு கொண்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை
* இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை கட்டாயம் சட்டபடி நடவடிக்கை எடுக்கும். மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ