)
Vinayagar Chaturthi in Thiruttani: திருத்தணியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகின்றது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வாங்கிச் சென்று பூஜை பொருட்களுடன் அவரவர் வீடுகளில் வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள முருகன் கோயிலுடன் இணைந்த சுந்தர விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மூலவர் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் விநாயகப் பெருமான் புலி வாகனத்தில் படைவீரனைப் போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார். விநாயகருக்கு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருத்தணி பைபாஸ் பகுதியில் செல்வ விநாயகர் திருக்கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருத்தணி நகராட்சி கீழ் பஜார் சந்திப்பு பகுதியில் உள்ள வர சித்தி விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் முழுவதும் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று விநாயகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கினார்கள்.
மேலும் திருத்தணியில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்ய களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், பழம், வெற்றிலை, பூ, பூஜை சாமான்கள், அவல் பொரி ஆகியவற்றையும் சென்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ