)
Viral Video Of Fan Falling On Vijay Vehicle At Coimbatore : நடிகரில் இருந்து, அரசியல் கட்சி தலைவராக ப்ரமோட் ஆனவர் ‘தளபதி’ விஜய். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தான் கடைசி படத்தில் நடித்து விட்டு அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதையடுத்து, முதல் மாநாடு, பரந்தூர் மக்களுக்காக போராட்டம், தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என மடமடவென அரசியல்வாதியாக வளர்ந்து விட்டார் விஜய். இந்த நிலையில், தற்போது பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவைக்கு சென்றிருக்கிறார்.
பூத் கமிட்டி மாநாடு:
தமிழக வெற்றிக்கழக கட்சியை பொறுத்தவரை, ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என தமிழகம் முழுவதும் 35ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம் சுமார் 70 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களும் இருக்கின்றனர். இந்த பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாட்டை 5 மண்டலங்களாக பிரித்து நடத்த திட்டமிட்டிருக்கும் விஜய், அதன் முதற்கட்டத்தில் இறங்கியிருக்கிறார்.
கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு, முதற்கட்டமாக நடத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2 நாள் மாநாடாக கோவை மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு சரவணம்பட்டி அருகே இருக்கும் குரும்ப பாளையத்தில் உள்ள SNS கல்லூரியில் தொடங்கியது.
விஜய்யை பார்க்க திரண்ட கூட்டம்..
Fan jumps like from a tree to catch Joseph Vijay during TVK road show. pic.twitter.com/O1cGkwHPbV
— Manobala Vijayabalan (@ManobalaV) April 26, 2025
விஜய், எங்கு சென்றாலும் அவரை காண்பதற்காக ஒரு பெரிய கூட்டமே செல்வதுண்டு. இந்த கூட்டம், அவர் நடிகராக இருக்கும் போதிலிருந்தே அவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவருக்காக வந்த கூட்டத்தை, மாநாட்டிலும் பார்க்க முடிந்ததது. இந்த நிலையில், கோவையின் முதல் நாள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது, அவர் கேரவன் மேல் நின்று அனைவருக்கும் கைக்காட்டிக்கொண்டே சென்றார். அப்போது, அவரை பார்க்க மரத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்தார் ஒரு தொண்டர். விஜய்யின் வண்டி அவர் இருந்த மரக்கிளையை தாண்டி நகர்ந்த போது அந்த இளைஞர் வண்டியின் மீது விழுந்து விட்டார். இந்த வீடியாே, தற்போது இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ