வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்

Voter List Revision 2025: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய தகவல்கள். இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 7, 2025, 07:35 PM IST
  • வாக்காளர் பட்டியல் திருத்தம்
  • வாக்காளர்களுக்கான முக்கிய தகவல்
  • 8 தகவல்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்

Voter List Revision 2025: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது, தமிழ்நாடு முழுவதும், 04.11.2025 முதல் 04.12.2025 முடிய சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) கீழ்க்காணும் விவரப்படி வாக்காளர் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

Add Zee News as a Preferred Source

1. வாக்காளர் கணக்கெடுப்பின் போது தற்போதைய நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சுய விபரங்கள் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 04.11.2025 தேதி முதல் 04.12.2025 தேதி வரை வாக்காளர்களது இல்லங்களில் வழங்கப்படும்.

2. கணக்கெடுப்புப் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) வழங்க வேண்டும்.

3. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவங்களை முதல் வருகையின் போது வாக்காளர்களிடம் வழங்க இயலவில்லை எனில் மூன்று முறை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்கு வருவார்கள்.

4. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்புப் படிவத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டு அவர்களது டீடுழு செயலியில் உள்ளீடு செய்வார்கள். ஒரு பிரதியில் ஒப்புகை செய்து அந்தந்த வாக்காளர்களிடத்தில் வழங்குவர்.

5. கணக்கெடுப்பின் போது தங்களது குடும்பத்தில் காலஞ்சென்ற உறுப்பினர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அதன் விவரத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

6. மேலும், இரட்டைப் பதிவு, நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்ட வாக்காளர்களது விவரம் தெரிந்திருப்பின் அதனை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

7. கணக்கெடுப்புப் பணியின்போது வாக்காளர்கள் எவ்வித ஆவணங்களையும் இணைத்து வழங்க வேண்டியது அவசியம் இல்லை.

8. வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் திரும்ப பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் மட்டுமே 09.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை சேகரிக்க உள்ளார்கள். வாக்காளர்கள் https://voters.eci.gov.in, என்ற வலைதளத்தை பயன்படுத்தி வாக்காளர் சுய விரபங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் ECINET செயலி மூலம் படிவங்களை நிரப்பி பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

எனவே, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100% சரியாக தயாரிக்க ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள விசாரணையின் போது பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : களத்தில் இறங்கும் திமுக கூட்டணி

மேலும் படிக்க | கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசு

மேலும் படிக்க | ரேஷன் கார்டு : போன் நம்பர் மாத்தனுமா? புதிய நகல் குடும்ப அட்டை வேண்டுமா? முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News