வக்பு வாரிய திருத்த சட்டம்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த முஸ்லீம் கட்சிகள்!

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் தனித் தீர்மானத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தனது தெரிவித்துள்ளது. மேலும் பல கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2025, 03:57 PM IST
  • வக்ஃப் வாரிய திருத்த சட்டம்.
  • தமிழக அரசு தீர்மானம்.
  • முஸ்லிம் கட்சிகள் நன்றி.
வக்பு வாரிய திருத்த சட்டம்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த முஸ்லீம் கட்சிகள்!

சட்டப் பேரவையில் சர்ச்சைக்குரிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குறிப்பிடத்தக்க நிலைப்பாட்டை எடுத்த தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை சமூகத்தில் ஆழமாக எதிரொலித்தது, முஸ்லிம்கள் மத்தியில் இருந்த பயத்தை நீக்கி உள்ளது என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இந்த சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது மட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதாக தெரிவித்தார். வக்ஃப் திருத்தச் சட்டம், வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் இருந்தது.

Add Zee News as a Preferred Source

சிறுபான்மையின முஸ்லிம்களை வஞ்சிக்கும் இந்த வக்ஃப் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்கிற தொடர்ச்சியான கோரிக்கைகளின் பிரதிபலிப்பாக இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று முதலமைச்சர் தீர்மானித்துள்ளது, இது அவர்களின் உரிமைகளை நிலைநாட்டி உள்ளது. மேலும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதையும், அவர்களின் சொத்துக்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது. சமூகத்தின் அடிப்படை விழுமியங்களை அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்வதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டு முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?

முக ஸ்டாலின் உறுதி

"ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரவுள்ள #WaqfAmendmentBill எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இஸ்லாமியர்களிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் எழாத நிலையில் ஒரேயடியாகப் பல திருத்தங்களை மேற்கொண்டு வக்பு அமைப்பின் செயல்பாட்டையே முடக்கும் நோக்குடன் பா.ஜ.க. செயல்படுகிறது. யாருக்காக இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களே இதனை ஏற்றுக்கொள்ளாதபோது இதற்கான தேவை என்ன? மக்களைப் பிளவுபடுத்தும், அரசியலமைப்பு வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தில் தலையிடும் இதனை ஒன்றிய அரசு முழுவதுமாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்" என்று தெரிவித்துள்ளார்.

இதர கட்சிகளும் ஆதரவு

ஒன்றிய அரசின் இந்த திருத்தம் வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது. புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் தானமாக வழங்கிய நோக்கமே சிதைந்துவிடும். கருத்து கேட்பு நடத்தும் போது அதிமுகவை அழைக்கவில்லை. இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாமானது. தமிழ்நாடு முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்ப்பட்டு அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான வக்பு வாரியத்தில் திருத்தம் கொண்டு வருவது ஏன்? மறுபரிசீலனை செய்ய வேண்டும் எதிர்பாக கொண்டு வரக்கூடாது ஒருமனதாக கொண்டு வந்தால் வரவேற்கலாம். தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தீர்மானத்தை வரவேற்கிறோம் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தவெக OUT - பாஜக IN.. மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்... முழுப் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News