வாக்கி-டாக்கி முறைகேடு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்!!

வாக்கி-டாக்கி கொள்முதல் ஊழல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Last Updated : Feb 2, 2018, 03:13 PM IST
வாக்கி-டாக்கி முறைகேடு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்!!  title=

தமிழக காவல்துறைக்கு 'வாக்கி டாக்கி' வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டுப் புகார்கள் தொடர்பாக காவல்துறை டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்முருகன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அதில், காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது என்றும், அதனால் அந்த நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017-18 ஆம் ஆண்டில் 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் 83.45 கோடி செலவு செய்து வெறும் 4000 வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் செந்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்திரிகை செய்தி அடிப்படையில் மனு தாக்கல் செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். 

மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதில் பொதுமக்களுக்கு அக்கறை உள்ளது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 

Trending News