பாகிஸ்தான் எதிர் தாக்குதல்! தமிழ்நாட்டில் எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும்?

India vs Pakistan War: தரம்சாலாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்பதை அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Written by - RK Spark | Last Updated : May 8, 2025, 10:53 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்.
  • தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா?
  • மத்திய அரசு தீவிர ஆலோசனை.
பாகிஸ்தான் எதிர் தாக்குதல்! தமிழ்நாட்டில் எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும்?

India vs Pakistan War: பஹல்காமில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை ட்ரோன்கள் மூலம் சுட்டு வீழ்த்தியது. இதில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு தலைவர்களும் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடிகளை கொடுத்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி... வெளியேறும் பார்வையாளர்கள்... போர் பதற்றம் காரணமா?

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவமும் ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இரவு அல்லது நாளை போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் ஏற்பட்டால் தமிழ்நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் யோசனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு சார்பிலும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் குஜராத்தின் கடல் வழியே வந்து மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தற்போது சென்னையில் உள்ள துறைமுகத்தை தீவிரமாக ராணுவம் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். சென்னையை தாக்குவதற்கு கடல் வழியாக தான் வரவேண்டும் என்பதால், அதனை சுற்றிய இடங்களில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இமாச்சல் பிரதேசின் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்பதை அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை குறிவைக்கும் பாகிஸ்தான்... தொடர்ந்து முறியடிக்கும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News