Tamilnadu Government Warning : வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் வெளியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு நன்னீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிடிலும் கூட போதுபான அளவு தண்ணீர் அருத்தவும். பயணங்களின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.எஸ்.ஆர், எலுமிச்சை ஜூஸ், இளநி, வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, பழைய சாதம் நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலனி அணிந்து, குடையுடன் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அனுக வேண்டும்.
குழந்தைகளுக்கான வழிமுறைகள்:
குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. இளநீர் போன்ற திரவங்களை பருகுவதற்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுதி நீரிழப்பை குறிக்கலாம்.
முதியவர்களுக்கான வழிமுறைகள்
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா? என உறுதிப்படுத்திக் கொள்ளவும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கான குறிப்புகள்
கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் போதிய செய்து கொடுக்கவும். அவசியமாக போதிய அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவளங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெளியில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது.
மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலுர், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் மேற்புரம் உள்ள இரும்புகள் சூடாகி மிளவிசிறி, டியூப்லைட் சுழன்று விழும் தன்மையை பெறுகின்றன. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக எவத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் சுழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தன்ணீர் ஊற்றி அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இனி வீட்டிற்கே தேடி வரும்!
மேலும் படிக்க | பெண்கள் சொந்தமாக நிலம் வாங்க, ஆட்டோ வாங்க கடனுதவி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









