)
இருசக்கர வாகனத்தில் மது போதையில் சென்ற இருவர் சாலையில் சென்ற கார்கள் மீது மோதி கடும் சேதத்தை ஏற்படுத்தினர். அவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தின் செல்போன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது? இந்த பதிவில் காணலாம்.
கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது வேகமாக இயக்குவதை மாநகரப் பகுதிகளில் குறைத்து உள்ளனர்.
இதை அடுத்து மாநகரப் பகுதியில் விபத்துகளின் உயிரிழப்புகளும் குறைந்து உள்ளது. இந்நிலையில் கோவை வடவள்ளியில் இருந்து கோவை மாநகருக்குள் பல பகுதிகளில் செல்லும் முக்கிய சாலையான லாலி ரோடில் போதையில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கி முன்னோக்கி சென்ற வாகனங்கள், கார்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி சென்றனர்.
அவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் அந்த நபர்களை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துகள் குறித்து காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்ற போதை ஆசாமிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதுமட்டுமின்றி வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மதுபோதையில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரின் பயணமும் பாதுகாப்பானதாக அமையும். இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ