நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல - திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு!

10 மாநிலங்களை கையில் வைத்துக் கொண்டு இந்தியாவை ஆண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர் என்று திமுக பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு.

Written by - RK Spark | Last Updated : Mar 23, 2025, 01:51 PM IST
  • நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல
  • இங்கு திணிப்பிற்கு எதிரானவர்கள்.
  • திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு.
நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல - திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்று உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா நேற்று திமுக இன்னும் எத்தனை காலத்திற்கு மொழியை வைத்து அரசியல் செய்ய போகிறது என்று கேட்கிறார். இன்று பாஜக மொழியை வைத்து தானே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், இந்தி திணிப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. பாஜக அரசு எங்களைப் பார்த்து மொழியை வைத்து அரசியல் செய்கிறோம் என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா?

மேலும் படிக்க | தொகுதி மறுசீரமைப்பு: முதல் JAC கூட்டத்தில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள் என்ன?

1937 ஆம் ஆண்டே இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் தலை தூக்கி விட்டது. அன்று முதல் தமிழன் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறான். இதற்கு உதாரணம் 1965 ஆம் ஆண்டு மாணவ சமுதாயம் திரண்டு இந்தி திணிப்புக்கு எதிராக போராடி தமிழுக்காக தன்னுயிரை தந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை, நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல.. இங்கு திணிப்பிற்கு எதிரானவர்கள். ‌ சமீபத்தில் இந்து திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் திமுக தூண்டி விட்ட போராட்டம் அல்ல. 1965 ஆம் ஆண்டு மாணவ சமுதாயத்தின் மூலம் தன்னெழுச்சியாக வந்த போராட்டம் தான் இந்தி இனிப்புக்கு எதிரான போராட்டம் என்று அண்ணா பேசினார். அதைத்தான் இன்றைக்கும் சொல்கிறோம்.

இந்தி திணிப்பு என்று வந்தால் தமிழன் தன்னச்சியாக கிளர்ந்து இருந்து போராடுவான், அதற்கு அவனுக்கு தகுதி இருக்கிறது. அவர்களை யாரும் தூண்டி விட வேண்டிய அவசியம் கிடையாது. அந்த வேலை திமுகவிற்கு தேவை இல்லாதது. செம்மொழி தமிழ் என்று தமிழுக்கு அந்தஸ்து பெற்று தந்திருக்கின்ற இயக்கம் கலைஞரின் திமுக செம்மொழி தமிழுக்கு ஆபத்து என்றால் கிழந்தெடுபவன் தமிழன் அவனை யாரும் தடுக்க முடியாது. பாஜக பேசுகிறதை பார்க்கும்போது இவர்கள் தமிழர்களா இவர்கள் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமா என்று ஒவ்வொருவரையும் எண்ணச் செய்கிறது. தமிழுக்கு ஆபத்து என்றால் தமிழன் ஒன்று கூட வேண்டுமே தவிர, ஏன் இந்தி படிக்க கூடாது என்று கேட்பவன் தமிழனாக இருக்க முடியாது. இந்தியை திணிக்காதே என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவின் நன்மைக்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இடத்தை குறைக்க குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவான மாநிலங்களில் அதிக எண்ணிக்கையை தந்து 10 மாநிலங்களை கையில் வைத்துக் கொண்டு இந்தியாவை ஆண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எந்த சர்வாதிகாரியையும் வாழ விட்டதாக ஆள விட்டதாக வரலாறு கிடையாது. நமது வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட விமான நிலையம், துறைமுகங்கள், பல ரயில்கள் இன்று தனியாருக்கு ஏலம் விடப்படுகின்றன. பல கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளோம் என்று அம்பானி அதானியை கிழக்கிந்திய கம்பெனி போல் இந்தியா எங்களோடது என்று சொல்லக்கூடிய நிலைமையை உருவாக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறாரா?

கிழக்கிலிருந்து சூரியன் புறப்பட்டு இருக்கிறார் நமது தலைவர் வடிவத்திலே அந்த சூரியனின் ஒளியில் நிச்சயமாக தாமரை மலராது மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று பேசினார். இங்கே இருக்கின்ற இளிச்சவாயர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் 2026 உங்களுக்கு தோல்வியைத்தான் கொடுக்கும் திமுகவை அழித்து ஒழித்து விட ஏதேதோ எத்தனை சதி செயல்கள் செய்தாலும் அத்தனை சதியையும் முறியடிக்கின்ற சக்தி திமுக தொண்டனுக்கு உண்டு திமுக உண்டு 2026 இல் திமுக 200 தொகுதிகளை வெல்வோம் என்று பேசினார்.

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கொடுத்த காரசாரமான பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News