அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வெற்றி வாய்ப்புக்கான தொகுதிகள், தமிழக முழுவதும் கட்சி பணியாற்ற அளிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, ஆர்எஸ்எஸிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை அழைத்தனர். இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளும் அழைப்பு கொடுத்தனர். வேலைகள் இருந்ததால் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை.
இந்த மாநாட்டில் திராவிடத்தை பற்றி பேசியதை அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும். வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சபை நாகரிகம் கருதி அமைதியாக இருந்து விட்டு சென்றுள்ளனர்.திமுக நிர்வாகிகளைக் கூட அவர்கள் அழைத்தார்கள் அப்படி அழைத்து விட்டு படக்காட்சி காண்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறோம். நாங்கள் விருப்பப்பட்டால் அமித்ஷாவை சந்திப்போம் அவரும் விரும்பினால் கூட்டணி சார்பில் சந்திப்போம் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. தேர்தல் நேரத்தில் பணபலம் அதிகார பலம் இருந்தாலும், மக்கள் இந்த ஆட்சியின் மீது கடும் கோபத்தில் இருப்பதால் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுத்து விட்டு பத்தாயிரம் ரூபாய் டாஸ்மாக் கடைக்கு செல்கிறது. இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிங்க: Shutdown: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மேலும் படிங்க: சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









