தமிழ்நாடு அரசின் இன்றைய முக்கிய அறிவிப்புகள்

Karthikeyan Sekar
Dec 02,2025
';


தமிழ்நாட்டில் தேசிய சராசரியை விட ஹெச்ஐவி தொற்று பாதிப்பு குறைவு. 2023-24ல் பாதிப்பு விகிதம் 0.16% ஆக உள்ளது.

';


“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

';


தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

';


2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார் அவர்களுக்கு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

';


1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

';


சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ்- 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்

';


28,87,382 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ரூ.2,460 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது

';


வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 175 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

';


தனிநபர் கடன் திட்டத்தில் 3,355 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது

';

VIEW ALL

Read Next Story