தமிழ்நாடு அரசின் இன்றைய முக்கிய செய்திகள்
ரூ.611 கோடியில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 'வொண்டர்லா ஹாலிடேஸ்' பொழுதுபோக்குப் பூங்கா திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் டித்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
தமிழ்நாடு முழுவதும் 763 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 1555 பகுதிநேர நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு
கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 30 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
திருக்கழுக்குன்றம், குன்னத்தூர் கிராமத்தில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி புத்தகங்களை துணை முதலமைச்சர் வழங்கினார்.
60 குஞ்சு பொரிப்பகங்களை நிறுவப்பட்டு 34095 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன
துல்லியமான மழை முன்னறிவிக்க 2 புதிய ரேடார்கள் அமைக்க தமிழ்நாடு அரசு 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது