தங்க பசை கேள்விபட்டிருக்கிறீர்களா? முக்கிய தகவல்கள்
தங்கப் பசை (Gold Paste) என்பது தங்கம் கடத்தப்படுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நவீனமான தந்திரம்
தங்கப் பசை என்றால் என்ன?: தூய தங்கத்தை மிக நுண்ணிய துகள்களாக்கி, மெழுகு அல்லது ரசாயனங்களுடன் கலந்து ஒரு பசை (Paste) போன்ற கலவையாக மாற்றுவதே தங்கப் பசை
இது திரவம் அல்லது ஜெல்லி போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால், பாதுகாப்புச் சோதனைகளின் போது எக்ஸ்ரே (X-ray) கருவிகளில் எளிதில் சிக்காது என கடத்தால்காரர்கள் நினைக்கின்றனர்.
கடத்தல்காரர்கள் இந்தப் பசையை சிறிய பொட்டலங்களாகக் கட்டி, தங்கள் உடலுக்குள் மறைத்து வைத்து எளிதாகக் கடத்திச் செல்கின்றனர்.
திடமான தங்கக் கட்டிகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர்களை விட, பசையை கண்டறிவது பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சவாலான காரியமாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரும்போது செலுத்த வேண்டிய அதிகப்படியான இறக்குமதி வரியைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இதிலுள்ள தங்கத்தின் தூய்மை மற்றும் எடையைப் பொறுத்து சர்வதேசச் சந்தை விலைக்கு ஏற்ப இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும்.
கடத்தப்பட்ட இடத்தைச் சென்றடைந்ததும், பசையிலுள்ள ரசாயனங்களை எரிக்கப்பட்டு அல்லது அமிலங்களைப் பயன்படுத்தி மீண்டும் 99.9% சுத்தமான தங்கமாக மாற்றப்படும்.
வரி ஏய்ப்பு செய்வதன் மூலம் கடத்தல்காரர்களுக்கு ஒரு கிலோ தங்கத்திற்குப் பல லட்ச ரூபாய் வரை சட்டவிரோத லாபம் கிடைக்கிறது.
தண்டனை: இந்தியாவில் தங்கப் பசையைக் கடத்துவது சுங்கச் சட்டம் 1962-ன் படி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
தற்போது நவீன ஸ்கேனர்கள் மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் விமான நிலையங்களில் இதுபோன்ற தங்கப் பசை கடத்தல்கள் அதிகளவில் முறியடிக்கப்பட்டு வருகின்றன.