யாருக்கு ரூ.1000 கிடைக்காது? பெண்களுக்கான முக்கிய அப்டேட்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது என பார்க்கலாம்
அரசின் பிற திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் பெண்களே விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது
ஒரே ரேஷன் கார்டை வைத்து இரு பெண்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
ஆவணங்களில் இருக்கும் முகவரியில் வசிக்காத பெண்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
வருமானம், வரி கட்டும் தகவல்கள் மறைத்து விண்ணப்பித்திருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
சொந்த பயன்பாட்டுக்காக கார் வைத்திருந்தால் அந்த குடும்பங்களின் பெண்களின் விண்ணப்பம் ஏற்கப்படாது
5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் கள ஆய்வில் தவறானது என நிரூபனமானால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்