வார விடுமுறை.. 900 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!

Weekend Holiday Special Buses: நவம்பர் 7 முதல் 9 வரை வரவிருக்கும் வார இறுதியில் அதிக பயணிகள் போக்குவரத்தை சமாளிப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) 900-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் வழக்கமான சேவைகளுடன் இயக்கப்படும் என முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 6, 2025, 01:28 PM IST
வார விடுமுறை.. 900 சிறப்பு பேருந்துகள்.. போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!

TNSTC Special Buses: நவம்பர் 7 முதல் 9 வரை வரவிருக்கும் வார இறுதியில் அதிக பயணிகள் போக்குவரத்தை எதிர்பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC), மாநிலம் முழுவதும் பயணிகளை வசதிக்காக வழக்கமான சேவைகளுடன் 900க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது

Add Zee News as a Preferred Source

வார விடுமுறை சிறப்பு பேருந்து:

நவம்பர் 7 முதல் 9 வரை (சனி மற்றும் ஞாயிறு) வார இறுதியில் பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் 900-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு பேருந்து நிலையங்களின் விவரம்:

கிளாம்பாக்கம் (Kilambakkam Terminus) பேருந்து நிலையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை 340 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும், இவை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் போன்ற முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும்.  

அதுமட்டுமில்லாமல் கூடுதலாக, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோயம்பேட்டில் (Koyambedu) இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 55 சிறப்பு பேருந்துகள் புறப்படும். 

அதேபோல பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு மேலும் 100 பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்கிடையில், நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மாதவரத்திலிருந்து (Madhavaram) 20 சிறப்பு சேவைகள் இயக்கப்படும். 

பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

முன்பதிவு முறை: கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் TNSTC அதிகாரப்பூர்வ வலைத்தளம் (www.tnstc.in) அல்லது மொபைல் செயலி (TNSTC Mobile App) மூலம் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு: பயணிகளுக்கு சுமுகமான பயண அனுபவத்தை உறுதிசெய்ய, முக்கிய பேருந்து முனையங்களில் போதுமான அதிகாரிகள் TNSTC-யால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு பேருந்து முன்பதிவு:

பயணிகள் கோரிக்கைகளின் அடிப்படையில், நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவுகள் (Pre-Bookings) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் 5,000 க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - தொடர் மழை காரணமாக... இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

மேலும் படிக்க - மாதம் ரூ.`13,000 உதவித்தொகை : 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி - உடனே விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க - திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள், ரயில்நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News