ஸ்டாலின் தொடங்கிவைக்கும் அன்புச்சோலை திட்டம்... முத்த குடிமக்களுக்கு இதனால் என்ன பயன்?

Anbucholai Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் நாளை (நவ. 9) அன்புச்சோலை திட்டத்தை தொடங்கிவைக்கும் நிலையில், இத்திட்டத்தால் மூத்த குடிமக்களுக்கு என்ன பயன் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 9, 2025, 03:59 PM IST
  • மொத்தம் 25 மையங்கள் திறக்கப்பட இருக்கின்றன.
  • ரூ.10 கோடி மதிப்பீட்டில் மையங்கள் தொடங்கப்படுகின்றன.
  • ஒரு மையத்தில் குறைந்தபட்சம் 50 முதியோர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டாலின் தொடங்கிவைக்கும் அன்புச்சோலை திட்டம்... முத்த குடிமக்களுக்கு இதனால் என்ன பயன்?

Anbucholai Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு (நவ. 9) புதுக்கோட்டைக்கு புறப்படுகிறார். மேலும், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களுக்கு நாளை (நவ. 10), நாளை மறுதினம் (நவ. 11) கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

Anbucholai Scheme: அன்புச்சோலை திட்டத்த தொடங்கிவைக்கும் ஸ்டாலின்

அதில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காவும், வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும்,  அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் நாளை (நவ. 10) தொடங்கிவைக்க இருக்கிறார். "அன்புச்சோலை முதியோர் மனமகிழ் வள மையம்" என்ற திட்டத்தை திருச்சி மாநகரில் நாளை (நவ. 11) பகல் 12.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்கள். இத்திட்டம் 2025-26 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

Anbucholai Scheme: 25 அன்புச்சோலை மையங்கள்

மேலும், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. தற்போது தொடங்கப்படும் "அன்புச்சோலை முதியோர் மனமகிழ் வள மையங்கள்" திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம் 20 அன்புச்சோலைகள், தொழில்துறை மாவட்டங்களான இராணிப்பேட்டையிலும் கிருஷ்ணகிரியிலும் 2 அன்புச்சோலைகள், பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 3 அன்புச்சோலைகள் என மொத்தம் 25 "அன்புச்சோலை" மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு வழங்கப்படுகின்றன.

Anbucholai Scheme: தமிழ்ப் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அன்புச்சோலைகள்

அன்புச்சோலை திட்டம், முதியோர்கள் மதிக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. குடும்பங்கள் முதன்மைப் பராமரிப்பாளர்களாகத் தொடர்வதற்கு அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் துணைபுரிகிறது. அன்புச்சோலை  திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, "முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை. 

Anbucholai Scheme: வழங்கப்படும் சேவைகள்

அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் அமைக்கப்படுகின்றன.

Anbucholai Scheme: அரசின் பார்வையை பிரதிபலிக்கும்

அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும். அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விடாது கொட்டும் கனமழை.. தென் மாவட்டங்கள் டார்கெட்.. சென்னையில் எப்படி?

மேலும் படிக்க | பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த்! கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

மேலும் படிக்க | தமிழக அரசின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News