2025 தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு பட்டியல்

Tamil Nadu Budget 2025 Latest News: தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 14, 2025, 12:14 PM IST
2025 தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு பட்டியல்

Students ForTamil Nadu Budget 2025: பொறியியல் வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அவர்களின் மொத்த கல்விச் செலவையும் முழுமையாக அரசே ஏற்றுக் கொள்கிறது.

Add Zee News as a Preferred Source

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் படிப்புகளில் தற்போது பயின்று வரும் 49,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றிடும் வகையில், வரும் நிதியாண்டிற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் தமிழ்நாட்டின் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் எகிரபாண்டியம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைய தலைமுறையினருக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கோடு சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும்.

இம்மையத்தில் அறிவியல், தொழில்நுட்ப நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஸ்டெம்புலன்கள் மட்டுமன்றி, விண்வெளி வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் இடம்பெற்றிருக்கும்.

குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வர்களை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள், அறிவியல் மாநாட்டுக் கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமை புல்வழிகள் என அனைத்து வசதியுடன் கூடிய பிரம்மாண்ட சென்னை அறிவியல் மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பம் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படும் .

நாள்தோறும் மாறிவரும் தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள் புத்தாக்கச் சிந்தனை தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆணிவேராகவும் அடித்தளமாகவும் இருப்பது அடிப்படை அறிவியல். 

காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி சேமிப்புத் தேவை, உலகெங்கும் பரவி வரும் நோய்க்கிருமிகள் என பல்வேறு சவால்கள் உருவாகி வருகின்றன.  இவைகளுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் புதிய பார்வையுடன் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதைப் போன்று அடிப்படை அறிவியல் மற்றும் கணித பேசிக் சயின்சஸ் அண்ட் மேத்தமேட்டிக்ஸ் ஆராய்ச்சி சூழலும் தமிழ்நாட்டில் மேம்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கருதுவதை நமது அரசு கவனமாக பரிசீலித்து வந்தது. 

இதனையடுத்து தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் இரண்டு அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் பண்டமெண்டல் ரிசர்ச் போன்ற நாட்டின் புகழ் பெற்ற ஆய்வு நிறுவன இணைந்து உருவாக்கிட 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

புகழ் பெற்ற அறிவியல் அறிவியல்களின் வழிகாட்டுதலுடன் முனைவர் மற்றும் முதுமுனைவர் பட்டப்படிப்பு மூலம் உயர் அறிவியல் ஆராய்ச்சிகள் மட்டுமின்றி மாணவரிடையே ஆழமான அறிவியல் மனப்பான்மை உருவாக்கிடவும், இம்மையங்கள் முக்கிய பங்காற்றிடும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித்துறைக்கு 8494 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - LIVE தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் தொடங்கியது... கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பென்சன், புதிய அறிவிப்புகள்!

மேலும் படிக்க - வங்கி கணக்கிற்கு நேரடியாக வரும் ரூ. 7000 நிதி! பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு!

மேலும் படிக்க - மகளிர் நலனில் திமுக அரசு.. பட்ஜெட்டில் பெண்களுக்கு ஐந்து முக்கிய அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News