TN Budget 2025 | மார்ச் 14.. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்.. வரப்போகும் மாற்றங்கள்

DMK Budget 2025: தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. என்னென்ன அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 13, 2025, 06:25 PM IST
TN Budget 2025 | மார்ச் 14.. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்.. வரப்போகும் மாற்றங்கள்

Tamil Nadu Budget 2025 Latest News: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் திமுக அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த பட்ஜெட்டின் முக்கியத்துவம் மற்றும் திமுக அரசுக்கு உள்ள சவால்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். 202526 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 

Add Zee News as a Preferred Source

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆனால் நாளை தாக்கல் செய்ய இருப்பதுதான் இந்த ஐந்த ஆண்டு கால ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். 

எனவே தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை விரைவில் அதிகரிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதால், அது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

புதிய அறிவிப்புகள் வருமா என பொதுமக்கள் மட்டுமன்றி, அரசு ஊழியர்களும் இந்த பட்ஜெட்டை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தமிழ்நாடு அரசின் நிதி நெருக்கடியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என பல முக்கிய திட்டங்களுக்கு கணிசமான தொகையை ஒதுக்க வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி கிடைக்காததால் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தமிழ்நாடு அரசின் நிதி பற்றாக்குறையும் கடனும் குறிப்பிட்ட வரம்புக்குள் தான் இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதனிடையே தமிழ்நாட்டில் முதல் முறையாக மத்திய அரசை போல் நிதியாண்டு பட்ஜெட்டிற்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு துறைவாரியாக மட்டுமே பொருளாதார ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக தொகுத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது இதை பொருளாதாரத்தை பற்றி ஒட்டுமொத்த ஜாதகம்னு சொல்லலாம். 

தமிழ்நாடு பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன துறைகள் எப்படி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அந்தந்த துறைக்கு சென்ற முறை அறிவித்த திட்டங்களில் எதுவெல்லாம் செயல்படுத்தி இருக்கோம். தற்போது என்னென்ன சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களுக்கு என்னென்ன தீர்வுகள் என ஒட்டுமொத்தமாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

எனவே தேர்தலின் தாக்கம் பட்ஜெட்டில் எதிரொளிக்குமா என்பது நாளை (மார்ச் 14) தெரியவரும். இந்நிலையில் நாளை நடைபெறும் தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கலையும் நாளை மறுதினம் நடைபெறும் வேளான் பட்ஜெட் தாக்கலையும் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

மேலும் படிக்க - தமிழ்நாடு பட்ஜெட் 2025: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்குமா?

மேலும் படிக்க - தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை... வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் - முக்கிய அம்சங்கள் என்ன?

மேலும் படிக்க - தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 முக்கிய அறிவிப்புகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News