தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2025, 12:59 PM IST
  • நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது - அதிமுக
  • பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
  • பாஜக கூட்டணியில் உள்ள பாமக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிரான அனைத்து கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 5) தொடங்கியது.

Add Zee News as a Preferred Source

TN All Party Meeting: பங்கேற்ற 56 கட்சிகள்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், அன்புமணி, சண்முகம், முத்தரசன், கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இதில் நாம் தமிழர் தவிர மற்ற கட்சிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

TN All Party Meeting: முதலமைச்சர் பேசியது என்ன?

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,"தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டுள்ளது" என பேசியிருந்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை பாதிப்பு குறித்து முதலமைச்சரும், தலைமைச் செயலரும் பவர்பாய்ண்ட் மூலம் விளக்கினர்.

TN All Party Meeting: பாஜக கூட்டணியில் உள்ள பாமக தெரிவித்த கருத்து

இருப்பினும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் பொதுச்செயலாளர் அன்புமணி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று அந்தந்த மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அனைத்துக் கட்ட கூட்டத்தில் அன்புமணி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக தரப்பு கருத்து

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்; தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியிருந்தார். நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் பேசியிருந்தார்.

திருமாவளவன் கருத்து

தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது. தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கை குழு" அமைப்பதற்கு முழு ஆதரவை அளிக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார்.

ஜவாஹிருல்லா கருத்து

'Prorata' என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சனையில்லை. வடமாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சனை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசினார்.

இது மாநிலத்தின் பிரச்னை - கீ. வீரமணி

தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை, நம் மாநிலத்தின் பிரச்சனை என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள ஐந்து கட்சிகளும் உணர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியிருந்தார். 

TN All Party Meeting: கூட்டு நடவடிக்கை குழு

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரிக்கிறது மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

மேலும் படிக்க | தேர்தல் 2026 | சீனியர்களுக்கு "நோ சீட்".. உள்ள வரும் உதயநிதி.. திமுக தலைமை வியூகம்

மேலும் படிக்க | பிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News