)
Koomapatty: சமூக வலைதளத்தில் அனைத்தும் சாத்தியமே என்பதற்கு பல்வேறு உதாரணங்களை கூற முடியும். புரட்சி முதல் ஆட்சி மாற்றம் வரை அனைத்திற்கும் சமூக வலைதளத்தின் பங்கு இந்த நவீன காலத்தில் இன்றியமயாததாகிவிட்டது.
அந்த வகையில், சமீபத்திய உதாரணமாக தமிழ்நாட்டின் விருதுநகரின் ஒரு மூலையில் இருக்கும் கூமாப்பட்டி என்ற கிராமம், தற்போது உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எனலாம்.
Koomapatty: உச்சக்கட்ட டிரெண்டிங்கில் கூமாப்பட்டி
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படும் கூமாப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் கூமாப்பட்டியின் அருமைப் பெருமைகள், இயற்கை அழகு நிரம்பிய காட்சிகளை் ஆகியவற்றை தொடர்ச்சியாக வீடியோவாக பதிவிட்டு வந்தார். அவரின் பேச்சு வழக்கு, அவர் கூமாப்பட்டியை வர்ணிக்கும் முறை, அதில் ததும்பும் நகைச்சுவை என பல்வேறு காரணங்களுக்காக அவரின் வீடியோக்களுக்கு ரசிக கூட்டம் அதிகமானது.
அப்படியிருக்க சமீபத்தில் கூமாப்பட்டி திடீரென டிரெண்டாக தொடங்கிவிட்டது. எங்கு திரும்பினாலும் இன்ஸ்டா சமூகத்தில் பலரும் கூமாப்பட்டியை பற்றிதான் பேச்சு. மீம்ஸ், ஸ்டோரிகள், பதிவுகள் என கூமாப்பட்டியை தொடர்புபடுத்தி பேச்சுகள் பலமாகின. பலரும் கூமாப்பட்டியை நோக்கி படையெடுக்கவே தொடங்கிவிட்டனர். அவர்கள் அங்கு சென்று கூமாப்பட்டியில் தங்களின் அனுபவங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Koomapatty: ஆட்சியர் போட்ட பதிவு
தற்போது இந்த டிரெண்டிங்கில் விருதுநகரின் ஆட்சியரும் சேர்ந்துவிட்டார் எனலாம். உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து தொடங்கும் நீண்ட பதிவை ஆட்சியர் ஜெயசீலன் (Jayaseelan) அவரது X பக்கத்தில் பதிவாக போட்டுள்ளார்.
அந்த பதிவில்,"நேற்றிலிருந்து (ஜூன் 25) நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்!
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன். கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
Koomapatty: எல்லாம் 'ரீல்'ஸ்காக மட்டுமே...!
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
@ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
— Dr V P Jeyaseelan (@jeyaseelan_vp) June 26, 2025
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க… pic.twitter.com/Kf5ZaX4yre
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள இடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி!!" என்றும் பதிவிட்டுள்ளார். ஆட்சியர் ஜெயசீலன் பகிர்ந்த இந்த புகைப்படங்களும், அவரின் பதிவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Koomapatty: ஜெயசீலனுக்கு பணியிட மாற்றம்
இதுபுறம் இருக்க, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகரின் ஆட்சியராக இருந்து வந்த ஜெயசீலன், சென்னை மாநகராட்சி இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நான்கு நாள்களுக்கு முன்னதாகவே ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Koomapatty: முதல்வரே பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
ஜெயசீலன் கடந்த இரண்டரை ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்திற்கு பல சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார். பணியிட மாற்றம் பெற்றுள்ள இவர் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பலரின் பாராட்டு மழையில் நனைந்துள்ளார். இவர் விருதுநகரில் இருந்து மாற்றல் ஆகிப்போவதால் மக்கள் கொஞ்சம் வருத்தத்தோடு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கோங்க...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் பணிவான நன்றிகள்.
— District Collector, Virudhunagar (@VNRCollector) June 15, 2025
மாணவச் செல்வங்களின் பள்ளிக்கல்வி, திறன்மேம்பாடு, உயர்கல்வி என கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களோடு மற்ற அரசு துறைகள் உயர் அலுவலர்கள்,சமூக ஆர்வலர்கள், தனியார்… https://t.co/yeEvMdS4Qr
அதேநேரத்தில், விருதுநகரில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வில் இவர் ஈடுபட்டது முதலமைச்சர் ஸ்டாலினின் பார்வை வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ