அடேங்கப்பா.. ஒரு எலுமிச்சை 13 ஆயிரம் ரூபாய்-ஆ? காரணம் இதுதாங்க..

Erode District News: தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமக் கோவிலில் ஒரு எலுமிச்சை மட்டும் ரூ.13 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 1, 2025, 12:48 PM IST
அடேங்கப்பா.. ஒரு எலுமிச்சை 13 ஆயிரம் ரூபாய்-ஆ? காரணம் இதுதாங்க..

Tamil Nadu Temple News: ஈரோடு அருகே மகாசிவராத்திரி பண்டிகையொட்டி ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம், வெள்ளி நாணயம் ஆகியவற்றை  ஆயிரக்கணக்கான ரூபாய் போட்டி போட்டு பக்தர்கள் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

Add Zee News as a Preferred Source

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பண்டிகையொட்டி சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம், நாணயம் போன்றவை ஏலத்தில் விடுவது வழக்கம். 

அதேபோல இந்தாண்டு நடைபெற்ற மகாசிவராத்திரி பண்டிகையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோவிலில் ஈஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமிக்கு சிவராத்திரி அன்று பயன்படுத்திய எலுமிச்சை பழம், சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம், கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலத்தில் விடப்பட்டது. 

இதில் தங்கராஜ் என்பவர் எலுமிச்சை பழத்தை 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். மொடக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார் பானுப்ரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். இதே போன்று வெள்ளி மோதிரத்தை அரச்சலூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் 43,100 ரூபாயும் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். 

இதற்கு முன்னதாக சாமிக்கு பயன்படுத்திய மூன்று பொருட்களையும் ஏலத்தில் எடுக்க ஆரம்ப விலையில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பொருட்களை ஏலத்தில் எடுத்து சாமியை வணங்கி வாங்கி சென்றனர். 

ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் சாமி அறை, தொழில் செய்யும் இடம் ஆகியவற்றில் வைக்கும் போது வீட்டில் ஐஸ்வரியம் கூடும், ஆரோக்கியம் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

ஆண்டுதோறும் பூஜை பொருட்கள் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த நிலையில், தற்போது பூஜை பொருட்கள் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தனர். மேலும் ஆண்டு தோறும் ஏலத்தில் விடப்படும் பொருட்கள் விலை அதிகரித்து கொண்டு செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க - LIVE தமிழ்நாடு முதலமைச்சர் ஆவேசம்... சீமான் வழக்கு விவரம், சிலிண்டர் விலை உயர்வு

மேலும் படிக்க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் கூறிய முக்கிய செய்தி!

மேலும் படிக்க - தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News