)
When Will CM MK Stalin Discharge: கடந்த ஜூலை 21ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்றபோது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
CM MK Stalin Health Update: மா. சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று தினங்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. முதலமைச்சருக்கு மீண்டும் நாளை மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 22) தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சுமார் இரண்டரை மணிநேரத்திற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திரும்பினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 23) வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
CM MK Stalin Health Update: எப்போது டிஸ்சார்ஜ்? இன்று தெரியும்!
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், "மு.க. முத்து மறைந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்கிங் சென்றார். அப்போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உடல் நலன் நன்றாக உள்ளது, அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும். முதல்வர் வீடு திரும்புவது குறித்து மருத்துவமனை தரப்பில் அறிவிப்பார்கள்" என்றார்.
இதைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அவர் வெளியே செல்லும்போது, முதல்வர் வீடு திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவமனை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CM MK Stalin Health Update: ஸ்டாலின் போட்ட ட்வீட்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்தும் சில அலுவல்களை தொடர்ந்தார். இதுகுறித்து அவர் நேற்று போட்ட பதிவில், "மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்" என குறிப்பிட்டிருந்தார்.
"மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.#உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்… pic.twitter.com/Yh2wyGhYYJ
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 22, 2025
முன்னதாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்தும் மா. சுப்பிரமணியம் அந்த பேட்டியில் பேசியிருந்தார். 13 துறைகளில் 43 சேவைகள் வழங்கும் மகத்தான திட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்றும் சென்னையில் 400 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன என்றும் தினம்தோறும் 6 இடங்களில் முகாம்கள் நடக்கிறது என்றும் அவர் தகவல் தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக (Kalaignar Magalir Urimai Thogai) அதிகமாக மனுக்கள் வருகின்றன என்றார்.
CM MK Stalin Health Update: மருத்துவமனைக்கு வந்த முக்கிய பிரமுகர்கள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி முதல்வரை நேரில் பார்க்க கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவிற்கு வருகை தந்தார். அப்போது பேசிய அவர், "எங்களது கட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்துள்ளோம். எங்கள் தலைவர் வெளிநாட்டில் இருப்பதால் முதல்வரை அவர் நேரில் வந்து நலம் விசாரிக்க முடியவில்லை. முதல்வரின் உடன் இருக்கும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து அவரது நலன் குறித்து விசாரித்தோம். முதல்வர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்" என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோரும் தற்போது அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ