)
Tamil Nadu Government Employees Latest News: பழைய ஓய்வூதிய திட்டம் (ஓல்ட் பென்ஷன் ஸ்கீம்) எப்பொழுது அமலுக்கு வரும்.. வருமா, வராதா.. தொடரும் அரசு ஊழியர்களின் போராட்டம் என பல தரப்பில் இருந்து எதாவது ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளன. தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான தகவல் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான் இந்த பழைய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, அவர்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
- தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வந்து அமல்படுத்தப்பட்டது.
- ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தால் தங்களுக்கு பெரிய நன்மைகள் மற்றும் எதிர்கால பயன்கள் இல்லை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
- 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் வாங்கிய கடைசி சம்பளத்தில 50% வந்து ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.
- இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, குறைஞ்சபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியர்களுக்கு அவங்களுடைய கடைசி சம்பளத்தின் அடிப்படையில ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
- அதே சமயம் வேலை செய்துக்கொண்டே இருக்கும் போது பணியிலிருந்து விலகுபவர்களுக்கு(Voluntary Retirement Scheme - விஆர்எஸ்) ரிட்டர்ன்மென்ட் ஸ்கீம் இருக்கிறது. அதன்மூலம் அவர்களுக்கு பணிக்கொடை ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஒப்படைத்து, அதற்கான தொகையை முன்கூட்டியே பெறுவது உள்ளிட்ட பல பயன்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்தது. ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை.
- புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கு அவங்களுடைய ஓய்வூதிய தொகையை பங்களிப்பு அடிப்படையியில் சேமித்து ஓய்வு பெறும்போது ஒரே தொகையாக பெற்று வருகிறார்கள்.
- இது அரசு ஊழியர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனென்றால், இந்த புதிய ஒய்வூதியம் திட்டத்தால், தங்களுக்கு பெரிய பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்ற குற்றசாற்றையும் வைத்து வருகிறார்கள்.
- மேலும் அரசு ஊழியர்கள் தரப்பில், ஒன் டைம் பேமெண்ட் ஆக கிடைப்பதால், அதன்பிறகு மாதம் மாதம் கிடைக்கும் ஓய்வூதியம் குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மார்க்கெட்டை பொருத்து ஓய்வூதியம் இருப்பதால், எவ்வளவு கிடைக்கும் என்பதில் உறுதி இல்லை என்ற புகாரும் வைத்து வருகின்றனர்.
- இதன் காரணமாக தான் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்காக தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில கடந்த 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்" என வாக்குறுதி அளித்தார்.ஆனால் ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரைக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தவில்லை.
- மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, "பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான மூன்று பேர் கொண்ட குழு" ஒன்றை அமைத்துள்ளது.
- இந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான சாதகம் மற்றும் பாதகம் குறித்து ஆராய்ந்து வரும் செப்டம்பர் மாதம் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
- இந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
- சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், விரைவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து நல்ல செய்தி வரும் எனக் கூறப்படுகிறது. இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் கிரீன் சிக்னல் கொடுத்து வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்கள் பக்கம் தான் திமுக அரசு நிற்கும் எனவும் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ