Economic Development In Tamil Nadu: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மேற்குப் பகுதி வளர்ச்சியில் முன்னிலை பெற்று இருக்கும் நிலையில், கிழக்கு பகுதி வளர்ச்சியில் மிகவும் பின்னோக்கி இருக்கிறது என்பது தமிழ்நாடு அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டின் எந்த பகுதி வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது? என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
தமிழ்நாட்டின் மாவட்டங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் முதல் தர்மபுரி வரையிலான 10 மாவட்டங்கள் வடக்கு மண்டலமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. விழுப்புரம் முதல் ராமநாதபுரம் வரையிலான 12 மாவட்டங்கள் கிழக்கு மண்டலமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. நீலகிரியிலிருந்து திருச்சி வரையிலான எட்டு மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. திண்டுக்கல் முதல் குமரி வரையிலான எட்டு மாவட்டங்கள் தெற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 31.8% வகிக்கும் வடக்கு மண்டலம் ஜிஎஸ்டிபி என்று அழைக்கப்படும் மாநிலத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 36% பங்களிப்பை வழங்குகிறது. 22.8% மக்கள் தொகை கொண்ட மேற்கு மண்டலம் தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள் தொகை கொண்ட தெற்கு மண்டலம் தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் 18.8% பங்களிக்கிறது. 25.5% மக்கள் தொகை கொண்ட கிழக்கு மண்டலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 15.1% பங்கை வழங்குகிறது.
பொதுவாக இந்திய அளவிலான வளர்ச்சி குறியீட்டில் தென் இந்தியா மாநிலங்கள் முன்னணியில் இருப்பதையும், வட மாநிலங்கள் பின்தங்கி இருப்பதையும் பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். அதற்கு மாறாக தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதையும், தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதையும் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த பொருளாதார ஆய்வறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.
இதேபோல சராசரி தனிநபர் வருமானத்திலும் வேறுபாடு இருப்பதை இந்த ஆய்வறிக்கை காட்டுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனிநபர் ஆண்டுக்கு ரூ.6.47 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனிநபர் ஆண்டுக்கு ரூ.1.48 லட்சம் மட்டுமே சம்பாதிக்கிறார் என்பது தெரிய வருகிறது.
அனைவருக்குமான வளர்ச்சியை பேசும் தமிழக அரசு வரவிருக்கும் காலங்களில் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை உணர்த்துவதாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









