)
Ration card : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிகின்றனர். டிஎன்பிடிஎஸ் தளத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்துவிட முடியும். புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் ஒருவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்துவிட்டால் வெறும் 5 நிமிடங்களில் வீட்டில் இருந்தே விண்ணப்பித்துவிடலாம். அதேநேரத்தில் ஒரு சிலர் மட்டும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு சமர்பிக்க தேவையில்லை. அரசு கொடுத்திருக்கும் இந்த விலக்கு யாருக்கு பொருந்தும், எப்படி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
திருமணமான ஒருவர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க விரும்பினால், கணவன், மனைவி இருவரும் தங்களது பெயரை ஏற்கனவே உள்ள குடும்ப ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். அதற்கும் டிஎன்பிடிஎஸ் தளம் (https://www.tnpds.gov.in/) மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும். அல்லது மாதந்தோறும் நடக்கும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களுக்கு சென்று ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்ககோரி விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு புதிய ரேஷன் கார்டு கோருபவரின் பெயரை நீக்கிய சான்று, திருமணச் சான்று, இருவரின் ஆதார் கார்டு, சொந்த வீடு என்றால் குடியிருக்கும் வீட்டின் வரி ரசீது, வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்த ரசீது, மின் கட்டண ரசீது, தொலைபேசி எண் ஆகியவை தேவை.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால் https://www.tnpds.gov.in/ தளத்துக்கு சென்று புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் பெயர், கணவன்/மனைவி பெயர், வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி, குடும்ப தலைவி புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் கார்டு, திருமணச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்பின் நீங்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்படும். அதை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக்கொண்டு உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.
யாருக்கு ஆதார் கார்டு தேவையில்லை?
ஆதார் கார்டு பொறுத்தவரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு சமர்பிக்கவில்லை என்றாலும் அவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும். இவர்களுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு சமர்ப்பிப்பதில் இருந்து அரசு விலக்கு கொடுத்துள்ளது.
நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா?
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தாலுகா மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்கள் உள்ளன. பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் மாதந்தோறும் நடக்கும் பொதுவிநியோக திட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கலாம். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து விதமான குறைகளுக்கும் நேரடியான தீர்வு இந்த குறைதீர் முகாம்களில் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ