பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா

Who Is Race for BJP National President: பாஜக தனது புதிய தேசியத் தலைவரை எப்போது அறிவிக்கும்? தேதி வெளியிடப்பட்டுள்ளது. தென் மாநிலத் சேர்ந்த தைஇரண்டு பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2025, 01:41 PM IST
பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் யார்? சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வானதி அக்கா

BJP New National President Announcement Soon: பாஜகவின் அடுத்த புதிய தேசியத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய தலைவருக்காக பாஜகவில் அனைவரும் காத்திருக்கிறார்கள். பாஜகவின் புதிய தலைவர் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரசியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஜே.பி. நட்டாவுக்குப் பிறகு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? இப்போது தேசிய செயற்குழு மற்றும் தேசிய கவுன்சில் கூட்டம் ஏப்ரல் 18 முதல் 20 வரை பெங்களூரில் நடைபெறலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்?

இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார் என்பது குறித்து ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாஜகவின் புதிய தேசியத் தலைவர் பதவிக்கு தெற்கிலிருந்து இரண்டு பெண்களின் பெயர்கள் முன்னணியில் உள்ளன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

தென் மாநில பெண்களின் பெயர்கள் முன்னணியில் உள்ளன

இதில் ஆந்திரப் பிரதேச பாஜக தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி மற்றும் பாஜக மகிளா மோர்ச்சா தேசியத் தலைவரும் கோவை எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் ஆகியோர் ஆவார்கள். தெற்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட, குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க, இந்தமுறை தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேசியத் தலைவராக அறிவிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு வருகிறது.

டக்குபதி புரந்தேஸ்வரி

டக்குபதி புரந்தேஸ்வரி 2014 இல் பாஜகவில் சேர்ந்தார். புரந்தேஸ்வரிக்கு நிறுவனப் பணிகளில் நல்ல அனுபவம் உண்டு. அவருடைய பேச்சுத்திறமை மற்றும் ஐந்து மொழியில் பேசக்கூடியவர் என்பதால், பாஜக வட்டாரத்தில் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தென் மாநிலத்தை பொறுத்த வரை பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு பரவலான வரவேற்பு உள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமாக இருக்கிறார். என்.டி. ராமாராவின் மகள் ஆவார். முதலில் காங்கிரசில் இருந்தவர். ஆந்திரா - தெலுங்கானா பிரிவை எதிர்த்து பாஜகவில் இணைந்தார். 

வானதி சீனிவாசன் 

வானதி சீனிவாசன் தேசியத் தலைவர் பதவிக்கான முக்கியப் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார். இவரின் பெயரும் பாஜகவின் புதிய தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளன. கடந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள்?

இந்த இரண்டு பெண் போட்டியாளர்களைத் தவிர, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. அதேநேரம் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு இருக்கிறது. ஆனால் மனோகர் லால் கட்டாரின் பெயரை பரிந்துரை செய்ய அமித் ஷா ஆட்சேபிப்பதாகத் தகவல்.

தமிழ்நாட்டை குறி வைக்கும் பாஜக

இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் தெற்கிலிருந்து வருவார் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பாஜக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாத இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. எனவே அதனைக் குறி வைத்து பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

மேலும் படிக்க - Live | மருத்துவமனையில் தயாளு அம்மாள்... அரையிறுதியில் IND vs AUS மோதல் - முக்கிய அப்டேட்ஸ்

மேலும் படிக்க - 'ஸ்டாலின் அடிச்ச கமிஷன் எவ்வளவு?' அண்ணாமலை கேள்வி? உடனே தங்கம் தென்னரசு சொன்னதை பாருங்க!

மேலும் படிக்க - முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News