)
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்பு முகாம்கள் மூலம் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடக்கும் இந்த முகாம்களில் லட்சக்கணக்கான விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 கிடைக்குமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கும் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இந்த திட்டத்தில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தில் எங்களால் பயனடைய முடியவில்லை என்று பலதரப்பட்ட பெண்கள் புகார் அளிக்கவே அவர்களின் பெயர்களும் தற்போது சேர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் முகாம் தொடங்கி ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில், தற்போது வரை 12 லட்சம் பெண்கள் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தினமும் பல்வேறு பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகிறன்றனர். இதனால் இறுதியில் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பேருக்கும் அரசு எப்படி மாதம் ரூ.1000 தரும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
மக்களின் இந்த சந்தேகத்திற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ரூ.1,000 கிடைக்காது என்று கூறப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தகுதி பெற சில விதிமுறைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அப்படி பூர்த்தி செய்து இருந்தால் மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், கார், சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி இந்த முறை தகுதியுடைவர்களாக மாறுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் முறையான சரிபார்ப்பிற்கு பிறகே திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புதிதாக விண்ணப்பித்த 12 லட்சம் பெண்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ரூ.1000 வழங்கப்படுமா அல்லது படிப்படியாக வழங்கப்படுமா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் விடுபட்டவர்களுக்கு பணம் கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. நவம்பர் மாதம் வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், அனைவரது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசு தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, செப்டம்பர் 15க்குள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ