CM's Thayumanavar Scheme Update: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் "பூவிதழ் எங்கும் பனித்துளிகள் காற்றசைவில் வீழ்ந்திடாமல் மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்" 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் அழகியல் ததும்பும் இக்கவிதை வரிகள் இயற்கையின் படைப்புகளுக்கு இடையே காணப்படும் ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு உணர்த்திச் செல்கிறது.
இயற்கையினை உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழை குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வரிசையில், ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறநாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி, அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
முதற்கட்டமாக மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 50,000 குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அதேபோல பள்ளி பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
-- திட்டத்தின் பெயர் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்
-- முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு மாநில அரசால் பிப்ரவரி 19, 2024 அன்று தொடங்கப்பட்டது.
-- மாநிலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதே குறிக்கோள்
-- பயனாளிகள் ஏழைக் குடும்பங்கள்
-- அதிகாரப்பூர்வ வலைத்தளம்
முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் நோக்கம்
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையைக் குறைக்கும். அதாவது தமிழ்நாட்டின் ஏழ்மையான பிரிவில் வாழும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க - 2025 தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு பட்டியல்
மேலும் படிக்க - இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20,000 மானியம்! யார் யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









